விஷால் 31 படத்தில் இணைந்த கோலிவுட்டின் முன்னணி காமெடி நடிகர்

சென்னை : நடிகர் விஷால் தற்போது விஷால் 31 படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார்.

இதன் சூட்டிங் ஐதராபாத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் படத்தின் புதிய இணைப்பாக கோலிவுட்டின் முன்னணி காமெடியன் படத்தில் இணைந்துள்ளார்.

விஷால் 31 படம்

விஷால் 31 படம்

நடிகர் விஷால் தற்போது விஷால் 31 படத்தில் நடித்து வருகிறார். தூபா. சரவணன் இயக்கத்தில் உருவாகிவரும் இந்த படத்தில் டிம்பிள் ஹயாத்தி ஹீரோயினாக இணைந்துள்ளார். தூபா சரவணன் முன்னதாக மிகுந்த வரவேற்பை பெற்ற எது தேவையோ அதுவே தர்மம் என்ற ஷார்ட் பிலீமை இயக்கியுள்ளார்.

துவங்கிய சூட்டிங்

துவங்கிய சூட்டிங்

படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் ஐதராபாத்தில் துவங்கியுள்ள நிலையில், விஷால் சூட்டிங் ஸ்பாட்டை மையமாக வைத்து விஷால் 31 - சாதாரண மனிதன் இல்லை என்ற பெயரில் சண்டை காட்சிகளை மையமாக கொண்ட வீடியோவை வெளியிட்டிருந்தார்.

விஷால் 31ல் இணைந்த அகிலன்

விஷால் 31ல் இணைந்த அகிலன்

இந்த வீடியோ ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தில் தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்துவரும் அகிலன் இணைந்துள்ளார். இவர் முன்னதாக பிரபுதேவாவின் பகீரா படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

யோகி பாபு இணைந்தார்

யோகி பாபு இணைந்தார்

இதேபோல கோலிவுட்டின் சூப்பர் காமெடியன் யோகி பாபுவும் தற்போது இந்த படத்தில் விஷாலுடன் இணைந்துள்ளார். இவர்கள் இருவரும் முன்னதாக சுந்தர் சி இயக்கத்தில் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது. விஷாலின் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதத்தில் சக்ரா படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

 எனிமி படத்தில் இணைந்த கூட்டணி

எனிமி படத்தில் இணைந்த கூட்டணி

புதுமுக இயக்குநர் ஆனந்தன் இயக்கத்தில் வெளிவந்த இந்த படத்தில் ஷ்ரதா ஸ்ரீநாத், ரெஜினா கசண்ட்ரா, ரோபோ சங்கர், மனோபாலா உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். இந்நிலையில் தற்போது ஆர்யாவுடன் இணைந்து விஷால் எனிமி என்ற படத்தில் நடித்து வருகிறார்., இவர்கள் இருவரும் முன்னதாக பாலாவின் இயக்கத்தில் அவன் இவன் என்ற படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X