“என்னையும் ஆரம்பத்தில் படுக்கைக்கு அழைத்தார்கள்”: பிரபல தெலுங்கு நடிகையின் சினிமா வாய்ப்பு ரகசியம்!
ஐதராபாத்: தெலுங்கு சீனிமாவில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து புகழ் பெற்றவது தேஜஸ்வி.
Recommended Video
தமிழிலும் ஒருசில படங்களில் நடித்து தேஜஸ்வி, சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது குறித்து மனம் திறந்துள்ளார்.
அப்போது, சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடிய போது கிடைத்த பாலியல் தொல்லைகள் குறித்தும் பேசியுள்ளார்.

மகேஷ்பாபுவின் படத்தில் அறிமுகம்
வெங்கடேஷ், மகேஷ் பாபு, சமந்தா, அஞ்சலி ஆகியோர் இணைந்து நடித்த படம் 'சீதம்மா வக்கிட்லோ சிரிமல்லே செட்டு.' ஸ்ரீகாந்த் அடாலா இயக்கத்தில் 2013ம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் தெலுங்கில் மிகப் பெரிய வெற்றிப்[ பெற்றது. இப்படத்தில் சிறிய பாத்திரத்தில் நடித்து, சினிமாவுலகில் அறிமுகமானார் தேஜஸ்வி. தொடர்ந்து 'மனம்', 'ஐஸ் க்ரீம்', 'சுப்ரமணியம் ஃபார் சேல்', மகேஷ்பாபுவுடன் 'ஸ்ரீமந்துடு' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தமிழிலும் அசத்திய தேஜஸ்வி
தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம்வரும் தேஜஸ்வி, தமிழிலும் அடியெடுத்து வைத்தார். 'நட்பதிகாரம் 79' என்ற படத்தில் அறிமுகமான தேஜஸ்வி, நடிப்பில் பலரது கவனத்தையும் ஈர்த்தார். தமிழில் அதிகம் வாய்ப்புகள் இல்லாததால், தொடர்ந்து தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். கவர்ச்சியான கட்டுடல் அழகியான தேஜஸ்விக்கு, தமிழில் இன்னும் தரமான படங்கள் அமையவில்லை என சொல்லப்படுகிறது.

பாலியல் தொல்லை குறித்து தேஜஸ்வி
தற்போது தெலுங்கில் 'கமிட்மெண்ட்' படத்தில் நடித்து வரும். தேஜஸ்வி சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார். அதில், சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது குறித்து மனம் திறந்துள்ளார். ''வாய்ப்புகளுக்காக பெண்களை படுக்கைக்கு அழைக்கும் கலாசாரம் அனைத்து துறைகளிலும் இருக்கிறது. சினிமாவில் மட்டும்தான் பெண்களுக்கு பாலியல் தொல்லை நடப்பதாக சொல்வதை ஏற்க முடியாது. சர்வதேச நிறுவனங்களில் வேலை பார்க்கும் எனது தோழிகளுக்கும், இதுபோன்ற பாலியல் தொல்லைகள் நடந்துள்ளது" எனக் கூறியுள்ளார்.

எனக்கும் அந்த அனுபவம் உண்டு
மேலும், "சினிமாவில் மட்டும் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது பிரபலமாகிவிட்டது. மக்கள் அதை பற்றி மட்டுமே பேசி வருகின்றனர். அவர்கள் நினைப்பது போல எனக்கும் பாலியல் தொல்லை நடந்துள்ளது.. சினிமாவில் நடிக்க வந்த புதிதில் எனக்கு பாலியல் ரீதியாக அழைப்புகள் வந்தன'. நேரடியாகவே என்ன படுக்கைக்கு அழைத்தன' என தெரிவித்துள்ளார். ஆனாலும் திரைத்துறையைச் சேர்ந்த யார் மீதும் அவர் நேரடியாக குற்றச்சாட்டுகளை முன்வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











