எலிமினேஷன் லீக் ஆகிடுச்சு.. இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது இவர் தான்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 5ல் இருந்து இந்த வாரம் யார் வெளியேறினார் என்கிற தகவல் கசிந்துள்ளது.
ஞாயிற்றுக் கிழமை எபிசோடுக்கான ஷூட்டிங் சற்று முன் முடிந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பலரும் எதிர்பார்த்து காத்திருந்த அந்த போட்டியாளர் வெளியேறி உள்ளார்.
கடைசி நேரத்தில் ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை கொண்ட நிலையில் அந்த போட்டியாளர் வெளியேறியது ரசிகர்களை சற்றே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

லீக்கான எலிமினேஷன்
சனிக்கிழமை ஷோ ஆரம்பித்து இன்றைக்கு யாரையெல்லாம் கமல் சேவ் பண்ணப் போகிறார் என்பதை ரசிகர்கள் ஆவலுடன் காண்பதற்கு முன்பே இந்த வாரம் யார் எலிமினேட் ஆனது என்கிற ரகசியம் லீக் ஆகி விட்டது. தொழில்நுட்ப வசதியால் தொடர்ந்து இப்படி எலிமினேஷன் குறித்த தகவல் கசிந்து வண்ணமே உள்ளது.

வெளியேறியது யார்
ரசிகர்கள் பலரும் முதல் வாரத்தில் இருந்தே எதிர்பார்த்து காத்திருந்த சின்ன பொண்ணு தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறி உள்ளார் என கூறப்படுகிறது. ஞாயிற்றுக் கிழமை எபிசோடுக்கான ஷூட்டிங் சற்று முன் நிறைவடைந்த நிலையில், இந்த தகவல் கசிந்துள்ளது.

அபிநய் சேவ்
சின்ன பொண்ணு அல்லது அபிநய் இருவரில் ஒருவர் தான் இந்த வாரம் வெளியேறுவார் என்றும் அதிக பட்சமாக சின்ன பொண்ணு தான் வெளியேறுவார் என ஏற்கனவே நாம் கெஸ் பண்ண மாதிரியே இந்த வாரம் சின்ன பொண்ணு வெளியேறி உள்ளார். கடைசி நபராக அபிநய் தான் இந்த வாரம் சேவ் ஆகி உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

அடுத்தது அபிநய் தான்
இந்த வாரமே அபிநய் வெளியேறிடுவார் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், சின்ன பொண்ணு வெளியேறியுள்ள தகவல் வெளியாகி உள்ள நிலையில், அடுத்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து அபிநய் கண்டிப்பாக வெளியேறிவிடுவார் என்று இப்போதே ரசிகர்கள் கூற ஆரம்பித்து விட்டனர்.

சுவாரஸ்யமே இல்லை
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் யார் சுவாரஸ்யம் இல்லாத போட்டியாளர் என பிக் பாஸ் கேட்பதற்கு பதிலாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் எலிமினேஷனே இப்படி எந்தவொரு சுவாரஸ்யமும் இல்லாமல் முன் கூட்டியே தகவல் கசிந்து ரசிகர்களை ரொம்பவே அப்செட் ஆக்கி வருகிறது.

பிரச்சனையே பண்ணல
அனைவருக்கும் இந்த சீசனில் பிக் பாஸ் வீட்டில் அம்மாவாகவே சின்ன பொண்ணு கடைசி வரைக்கும் இருந்து விட்டு யாரிடமும் எந்தவொரு பிரச்சனையும் பண்ணாமல் விளையாடி சென்றுள்ளார். பிரியங்கா உடைமாற்றும் அறைக்கு அவரை அழைத்துச் சென்று செக் செய்த போதும் சின்ன பொண்ணு பெரிதாக கோபித்துக் கொள்ளாமல் தனது பெருந்தன்மையை காட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











