twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    "லேர்ன் டூ லீவ் வித் கொரோனா".. குழந்தைகளுக்கான அனிமேஷன் குறும்படம் !

    |

    சென்னை : நடிகர் கார்த்தி, "லேர்ன் டூ லீவ் வித் கொரோனா" என்ற அனிமேஷன் குறும்படத்தை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    Recommended Video

    LOCKDOWN MOVIES : வீட்டில் இருந்து பார்க்க வேண்டிய முக்கியமான படங்கள் | FILMIBEAT TAMIL

    சினிமா பலருக்கும் பொழுதுபோக்கு அம்சம் ஆனால் அதே சினிமாவின் மூலம் மிகப்பெரிய வரலாற்று நிகழ்வையும், நம் மனதில் நினைப்பதையும், நாம் பலருக்கு சொல்ல விருப்பப்படும் கருத்துக்களையும் சொல்லமுடியும் என்பது உண்மை. இவ்வளவு ஏன் பல அரசியல் பிரமுகர்களும் சினிமாவில் இருந்து வந்துள்ளனர்.

    தொப்பியை தூக்கி போட்டு டிக்டாக்.. அட நல்லா இருக்கே.. நடிகையின் வித்தியாசமான வீடியோ !தொப்பியை தூக்கி போட்டு டிக்டாக்.. அட நல்லா இருக்கே.. நடிகையின் வித்தியாசமான வீடியோ !

     Learn to Live with Corona Animated short film for children

    ஒரு கல்லை சேதுக்கி சேதுக்கி எப்படி அழகான சிலையாக உருவாக்கப்படுகிறது. அதேபோலத்தான் ஒரு திரைப்படத்தை இயக்குனர் கதை, வசனம், இசை அனைத்தையும் கொண்டு சேதுக்கி ஒரு அழகிய படமாக உருவாக்குகிறார். இதற்கு, இயக்குனரின் பங்கு மிகவும் முக்கியமானதாகும்.

     Learn to Live with Corona Animated short film for children

    இதுவரை நாம் பார்த்திராத பல நிகழ்வுகளை நம் கண் முன் கொண்டு வரும் அதிசயம் சினிமாவிற்கு உண்டு. காந்தி, ஹிட்லர் என பலரையும் நம் கண் முன் நிறுத்தியதும் சினிமாதான். இது போலவே நம் உலகில் நடந்த சுனாமி, பூகம்பம் போன்ற பேரழிவுகளை கூட படமாக உருவாக்கியுள்ளனர்.

     Learn to Live with Corona Animated short film for children

    உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பற்றி பயத்தில் இருக்கும் போது. தொற்று நோய் பரவுதலை வைத்து எடுக்கப்பட்ட கண்டாஜியன் மற்றும் மலையாள படமான வைரஸ் போன்ற படங்களை பார்த்தல் எப்படி முன்கூட்டியே இப்படி யோசித்தார்கள் போன்ற கேள்விகள் நமக்குள் வரும். பல கேள்விகளை அந்த படம் கேட்க வைக்கும்.

     Learn to Live with Corona Animated short film for children

    சினிமா நம்மை காலம் கடந்தும் யோசிக்க வைக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதே போல் வயதை பொருத்தும் படங்கள் பார்க்கும் விதம் மாறும். குறிப்பாக சிறுவர்கள் அனிமேஷன் படங்கள் என்றால் விரும்பிப் பார்ப்பார்கள். எனவே அதை கருத்தில் கொண்டு இந்த கொரோனா நேரத்தில் மக்களை விழிப்புணர்வு செய்ய நம் நடிகர் கார்த்தி அவர்கள் தன் ட்விட்டர் பக்கத்தில் அனிமேஷன் குறும்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த படத்தின் பெயர் "லேர்ன் டூ லீவ் வித் கொரோனா"

     Learn to Live with Corona Animated short film for children

    ஆறு வயதான காயம்பூ என்ற சிறுவனின் ஓவியங்களை கொண்டும் பத்து வயதான அபிநந்தன் எனும் சிறுவனின் குரலைக் கொண்டும் இந்த படம் உருவாக்கப்பட்டது. அருவி திரைப்படத்தில் கவனம் பெற்ற வேதாந்த பரத்வாஜ் இக்குறும்படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

     Learn to Live with Corona Animated short film for children

    இந்த குறும்படத்தில் நாம் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும், கைகளை தினமும் சீராக கழுவவேண்டும், இதற்கான காரணங்கள் என்ன, கொரோனா தொற்று எப்படி பரவும் போன்றவை பற்றி இதில் சொல்லப்பட்டுள்ளது. இந்த லாக் டவுன் நேரத்தில் நிச்சயம் குழந்தைகள் மற்றும் பெற்றோர்களால் பார்க்க வேண்டிய குறும்படமாக இதை பலரும் பாராட்டி வருகின்றனர்.

    English summary
    "Learn to Live with Corona" Animated short film for children
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X