Don't Miss!
- News
திடீரென உதயநிதி கான்வாய்க்குள் புகுந்த வண்டி.. டக்கென சுதாரித்த ஓட்டுநர்..பெரும் விபத்து தவிர்ப்பு!
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Sports
இந்தியா வெல்ல சூர்யகுமார் அதை செய்யனும்.. வாசிங்டன் சுந்தர் அதிரடிக்கு காரணம் -தினேஷ் கார்த்திக்
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
வெந்து தணிந்தது காடு படத்தில் இணைந்த ஹாலிவுட் சண்டை இயக்குநர்!
மும்பை : நடிகர் சிம்பு மற்றும் கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகி வருகிறது வெந்து தணிந்தது காடு படம்.
படத்தின் சூட்டிங் தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் படத்தின் புதிய இணைப்பாக ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர் லீ விட்டேகர் தற்போது படத்தில் இணைந்துள்ளார்.
பிக் பாஸ் கேமை மாற்ற ஆரம்பித்த மக்கள்.. அவங்க கேட்க ஆரம்பிச்சிட்டா மாத்தி தான் ஆகணும்!

நடிகர் சிலம்பரசன்
நடிகர் சிலம்பரசன் தற்போது பல படங்களில் ஒப்பந்தமாகி சிறப்பான வகையில் முடித்து வருகிறார். முன்னதாக இவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்த நிலையில் தற்போது சூட்டிங்கிற்கு நேரத்திற்கு வருகிறார் என்பது குறித்த பாசிட்டிவ் கருத்துக்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

மாநாடு படம்
இந்நிலையில் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து முடித்துள்ளார் சிம்பு. இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது தீபாவளி பந்தயத்தில் இருந்து பின்வாங்கியுள்ளது நவம்பர் 27ம் தேதி ரிலீசாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெந்து தணிந்தது காடு படம்
இந்நிலையில் அடுத்ததாக கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார். இந்தக் கூட்டணி எப்போதுமே ரசிகர்களுக்கு பிடித்தமான கூட்டணி என்ற நிலையில் தற்போது இந்தப் படத்தின் சூட்டிங் மும்பையில் நடைபெற்று வருகிறது.

ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர்
வேல்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துவரும் நிலையில் மும்பையில் படத்தின் சண்டை காட்சிகள் உள்ளிட்டவை படமாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் படத்தின் சிறப்பான அப்டேட்டாக படத்தின் ஸ்டண்ட் மாஸ்டராக தற்போது ஹாலிவுட்டின் லீ விட்டேகர் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

மும்பையில் படப்பிடிப்பு
தற்போது சண்டை காட்சி ஒன்றையும் அவர் இயக்கி முடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஸ்ட் அண்ட் பூரியஸ் 5 உள்ளிட்ட பல்வேறு ஹாலிவுட் படங்களை இயக்கியுள்ள அவர், பாகுபலி, விஸ்வரூம் மற்றும் ஆரம்பம் உள்ளிட்ட படங்களிலும் பணிபுரிந்துள்ளார். தற்போது சிம்பு படத்திலும் இணைந்துள்ளார்.

லீ விட்டேகர் மகிழ்ச்சி
இந்நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பில் இணைந்து பணிபுரிந்தது குறித்து விட்டேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்த இனிய மனிதர்களுடன் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏஆர் ரஹ்மான் இசை
படத்தில் கயடு லோஹர் நாயகியாக நடித்து வருகிறார். படத்தின் இசையமைப்பை ஏஆர் ரஹ்மான் மேற்கொண்டுள்ளார். பாடலாசிரியராக தாமரை பணிபுரிந்து வருகிறார். படத்தின் கதையை ஜெயமோகன் எழுதியுள்ளார். ராதிகா சரத்குமார் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.