சுசி கணேசன்களின் அப்பன்களையும் பார்த்தாச்சு: லீனா மணிமேகலை

By Siva

Recommended Video

திருட்டுப்பயலே 2 சுசி கணேசன் மேல 100 Case போடலாம்- லீனா மணிமேகலை- வீடியோ

சென்னை: சுசி கணேசன்களின் அப்பன்களையும் பார்த்தாகி விட்டது என்று இயக்குனர் லீனா மணிமேகலை தெரிவித்துள்ளார்.

2005ம் ஆண்டு இயக்குனர் சுசி கணேசன் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக இயக்குனர் லீனா மணிமேகலை தெரிவித்துள்ளார். இந்த புகாரில் உண்மை இல்லை என்று சுசி கணேசன் தெரிவித்துள்ளார்.

அதற்கு லீனா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அளித்துள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது,

பொய்

பொய்

மிரட்டல் கட்டம் முடிந்து கணேசன் பல வகைகளில் யோசித்து பொய்களை அவிழ்த்து விடுகிறார். அப்பட்டமான பொய்கள் மூலம் என்னை சாய்த்துவிட முடியாது. சுசி கணேசன் தீபம் தொலைக்காட்சிக்கு பேட்டி தந்த வருடம் 2005. அவரை விருந்தினராக அழைத்தது நிர்வாகம் தான். நானல்ல.

நிகழ்ச்சி தொகுப்பாளினி

நிகழ்ச்சி தொகுப்பாளினி

தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளராக, VJ ஆக இருந்ததால் பல இலக்கிய புத்தக நிகழ்ச்சிகளை நட்புக்காக தொகுத்து வழங்கியிருக்கிறேன். சுசி கணேசன் குறிப்பிடும் புத்தகத்தை கலைஞன் பதிப்பகத்திற்காக (இரண்டு வருடங்களுக்கு முன் கூட என் நூலொன்றை பதிப்பித்தது கலைஞன் பதிப்பகம்) நான் தொகுத்து வழங்கியது அதற்கும் முன்பு. அப்போதும் சுசி கணேசன் என்பவர் என் நண்பர் இல்லை.

அழைக்கவில்லை

அழைக்கவில்லை

நானும் ஜெரால்டும் சுசி கணேசனை எங்கள் ஸ்டூடியோவிற்கு ஒரு நாளும் அழைத்ததில்லை. என் முதல் தொகுப்பு வந்த வருடம் 2003. என் முதல் ஆவணப்படம் வந்த வருடம் 2002. எனக்குப் படங்களுக்கு பாட்டெழுதும் ஆர்வம் எப்போதும் இருந்ததில்லை. நான் உதவி இயக்குநராக வேலை செய்ய விருப்பப்படும் அளவு தகுதியான இயக்குநராக சுசி கணேசன் எப்போதும் இருந்ததில்லை.

இழப்பு

இழப்பு

எனக்கு போதுமான அளவு புகழ் இருக்கிறது. என் மீது நடந்த அத்துமீறலை சொல்வதால் எனக்கு தான் வாய்ப்புகள் குறையும். தகாத பேச்சுகள் பெருகும். Problemetic பெண்ணாக அடையாளப் படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப் படுவேன். இதில் இழப்பு எனக்குத் தான். இந்த சமூகம் குற்றவாளிகளாக இருந்தாலும் ஆணுக்குத் தான் சலுகைகளை அளிக்கும்.

ஃபேஷன் அல்ல

ஃபேஷன் அல்ல

என் body language குறித்து விமர்சனம் வைக்கிறார் சுசி கணேசன். குற்றவாளிகள் தான் கூனி குறுகி கண்ணீரும் கம்பலையுமாக நிற்க வேண்டும். என் மிடுக்கை எதற்காகவும் விட்டுத் தர முடியாது. பெண்ணியம் என்பது பாலின சமத்துவத்தில் அக்கறையிருப்பவர்கள் நம்புவது. பேஷன் அல்ல.
நான் எழுதும் கவிதைகளில் இருக்கும் வார்த்தைகள் சுசி கணேசன் போன்ற ஆதிக்க மனம் இருப்பவர்களுக்கு கொச்சையாகத் தான் தெரியும். இலக்கியம் வாசித்திருந்தால் ஏன் திருட்டுப்பயலே எடுக்கப்போகிறார்?

குற்றம்

ஆக சுசி கணேசன் சத்தியம் செய்து, கடவுளை சாட்சியாக கூப்பிட்டு பொய்கள் தன்னைக் காப்பாற்றும் என நம்புகிறார். ஒரு குற்றத்தை மறைக்க அடுக்கடுக்காய் எவ்வளவு குற்றங்கள் செய்ய வேண்டியிருக்கிறது. கடும் பிரயத்தனம் தான். 2005-ல் இருந்த லீனா மணிமேகலை இல்ல நான். சுசி கணேசன்களின் அப்பன்களையும் பார்த்தாகி விட்டது. என் மடியில் கனம் இல்லை. உரம் மட்டுமே என்று லீனா மணிமேகலை தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X