பாலியல் குற்றம் செய்பவர்கள் பொண்டாட்டியிடம் சொல்லிவிட்டா செய்கிறார்கள்?: லீனா

By Siva

Recommended Video

திருட்டுப்பயலே 2 சுசி கணேசன் மேல 100 Case போடலாம்- லீனா மணிமேகலை- வீடியோ

சென்னை: பாலியல் குற்றம் செய்பவர்கள் தம் பொண்டாட்டியிடம் சொல்லிவிட்டா செய்கிறார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார் லீனா மணிமேகலை.

இயக்குனர் சுசி கணேசன் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார் இயக்குனரும், கவிஞருமான லீனா மணிமேகலை. இந்த புகாரை மறுத்த சுசி கணேசன் நடிகர் சித்தார்த்தின் அப்பாவுக்கு போன் செய்து லீனாவை ஆதரிக்கக் கூடாது என்று மிரட்டியுள்ளார்.

அவர் மிரட்டல் விடுத்த பிறகு தான் லீனாவின் வார்த்தைகள் மீது பலருக்கும் நம்பிக்கை வந்துள்ளது. இந்நிலையில் சுசி கணேசன் நல்லவர் என்று அவரின் மனைவி தெரிவித்துள்ளார்.

[தளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி]

புகார்

பாலியல் குற்றம் செய்பவர்கள் தம் பொண்டாட்டியிடம் சொல்லிவிட்டா செய்கிறார்கள்...? சுசிகணேசனின் மனைவியின் சான்றிதழை வைத்துக்கொண்டு அவரின் குற்றங்களை எப்படி தள்ளுபடி செய்வது? என்று லீனா கேள்வி எழுப்பியுள்ளார்.

#metoo

பிரபலம்

#metoo

சுசி கணேசன் சொல்வது போல பொய்யாக குற்றச்சாட்டு சொல்லி இன்னும் பிரபலமாக வேண்டும் என்பது தான் என் நோக்கம் என்றால், ஹேண்ட்சம்மாக, எனக்கு heavy crush இருக்கிற, நான் விரும்பும் சினிமா எடுக்கும், நன்கு அறியப்பட்ட, சர்வதேச அளவில் புகழ்பெற்ற இயக்குநர் ஒருவரை தேர்ந்தெடுத்து சொல்லியிருப்பேன். நிச்சயமாக இதில் எந்த லட்சணமும் சுசி கணேசனுக்கு இல்லை என்கிறார் லீனா.

Bulbul Isabella, உங்க மொழியில் குணமா "நல்ல வார்த்தை" எல்லாம் போட்டு இதை எப்படி சொல்வது?

மீ டூ

மீ டூ

மீ டூ இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்து வரும் பிரபலங்கள் கூட தன் குடும்பத்தார் மீது புகார் வந்தால் அமைதியாகிவிடுகிறார்கள். இல்லை என்றால் ஆதாரம் கேட்கிறார்கள். அடுத்தவர்கள் மீதான புகாரின்போது மட்டும் பாலியல் தொல்லை கொடுக்கும் போது அதை வீடியோ, புகைப்படமா எடுக்க முடியும் என்று கேட்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தீவிரம்

தீவிரம்

மீ டூ இயக்கம் தீவிரமடைந்து வருகிறது. மேலும் பலர் புகார் தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மலையாள திரையுலகை சேர்ந்தவர்களும் புகார் தெரிவிக்க வேண்டும் என்று சில பிரபல நடிகைகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ் திரையுலகை பொருத்தவரை மீ டூ இயக்கம் இன்னும் தீவிரமடையவில்லை என்று தான் கூற வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X