twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'வெள்ளை வேன் கதைகள்' படம் பற்றி இணையத்தில் தவறான கருத்து: லீனா மணிமேகலை ஆர்ப்பாட்டம்!

    By Shankar
    |

    சென்னை: சென்னை பல்கலைக் கழக தமிழ் இலக்கியத்துறை நடத்திய பெண்ணிய உரையாடல் நிகழ்ச்சியில், இயக்குநரும் எழுத்தாளருமான லீனா மணிமேகலை திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த சந்திப்பிற்கு தலைமை தாங்கிய சுவிட்சர்லாந்தை மையமாகக் கொண்டு இயங்கும் ஒரு இணையதளத்தின் ஆசிரியருக்கு எதிராக பதாகையுடன் அரங்கத்தில் அமர்ந்து எதிர்ப்பு தெரிவித்தார்.

    லீனாவின் வெள்ளை வான் கதைகள் படத்தை பற்றி அந்தத் தளம் அவதூறாக செய்தி வெளியிட்டதாகவும் அதை திரும்பப் பெறவும், மன்னிப்பு கோரியும், தனது படக்குழுவினருடன் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

    வெள்ளை வேன் கதைகள்

    வெள்ளை வேன் கதைகள்

    இலங்கையில் வெள்ளை வானில் அழைத்து சென்றவர்கள் காணாமல் போனவர்களாகி விடுகிறார்கள். அப்படிப்பட்டவர்களின் குடும்பத்தினரை இலங்கைக்கு இலக்கிய வாதிகள் சந்திப்பிக்கு சென்ற லீனா மணிமேகலை படம் பிடித்து வெள்ளை வான் கதைகள் என்ற தலைப்பில் ஆவணப் படமாக்கியுள்ளார். இது லண்டனில் பார்வையாளர்களுக்கு நவம்பர் மாதம் திரையிடப்பட்டுள்ளது.

    மேலும் இதிலிருந்து 12 நிமிட காட்சிகள் சானல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது. காணமல் போனவர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் தங்கள் கண்ணீர்க் கதைகளைப் பதிவு செய்துள்ளனர். அதில் முன்னாள் பெண் போராளி வெற்றிச்செல்வி என்பவரும் ஒருவர் ஆவார்.

    இணையதள செய்தி

    இணையதள செய்தி

    வெள்ளை வான் கதைகள் குறித்து ஒரு இணைய தளத்தில், பெண்கள் செயற்பாட்டு வலைமன்றத்தை சார்ந்த சந்தியா இஸ்மாயில் என்பவர் பெயரில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இதில் பெண் போராளிகளின் விருப்பத்திற்கு மாறாக லீனா அவர்களின் உரையாடலை வீடியோவில் பதிவு செய்ததாகவும், புகைப்படத்தை வெளியிட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

    மேலும் இலங்கை அரசாங்கத்திடமிருந்து இதன் மூலம் பெண் போராளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும்அந்த இணையதள செய்தி குறிப்பிட்டுள்ளது.

    லீனா மணிமேகலை மறுப்பு

    லீனா மணிமேகலை மறுப்பு

    வெள்ளை வான் கதைகள் ஆவணப்படத்தில் வெற்றிச்செல்வி என்ற பெண் போராளியின் வாக்குமூலம் மட்டுமே பதியப்பட்டுள்ளதாகவும், தனது உயிருக்கு அச்சம் என்ற நிலையிலும் இதை பதிவு செய்வதை தனது கடமையாக நினைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் என்று லீனா மணிமேகலை மறுப்பு தெரிவித்துள்ளார்.

    மேலும் தன் மீது அவதூறு பரப்புவதற்காக பொய்யான செய்தியை வெளியிட்டுள்ளதாக இணையதள ஆசிரியர்மீது குற்றம் சாட்டியுள்ளார்.

    சந்தியா இஸ்மாயில் என்ற பெயரில் யாரும் இல்லை என்று பெண்கள் செயற்பாட்டு வலைமன்றம் லீனாவிடம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் பெண்போராளி வெற்றிச்செல்வி இன்னும் லீனாவுடன் தொடர்பில் இருப்பதாகவும், அவரிடமே நேரிடையாக கேட்டு உண்மையை அறிந்து கொள்ளுமாறும் கூறியுள்ளார்

    சென்னையில் போர்க்கொடி

    சென்னையில் போர்க்கொடி

    இந் நிலையில் சென்னைப் பல்கலைக் கழகம் தமிழ் இலக்கியத் துறை இணைந்து நடத்திய பெண்ணிய உரையாடல் நிகழ்ச்சியில் தலைமை தாங்க வந்திருந்த அந்த இணையதள ஆசிரியரை எதிர்த்து போராட்டத்தில் குதித்துள்ளார். இணையதளம் மன்னிப்பு கேட்கும் வரை தனது போராட்டம் தொடரும் எனவும், பெண்ணிய உரையாடல் நிகழ்ச்சியில், ஒரு பெண்ணுக்கு எதிரான அவதூறை தட்டிக்கேட்க யாரும் முன்வராதது குறித்து வருத்தமும் தெரிவித்துள்ளார்.

    சென்னை பல்கலைக்கழக அரங்கில் குறித்த இணையதளம் மற்றும் அதன் ஆசிரியருக்கு எதிராக, பதாகையுடன் தரையில் அமர்ந்து லீனா மணிமேகலை நடத்திய ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு கிளம்பியது.

    English summary
    Writer - film maker Leena Manimegalai has staged a protest against a media editor for criticising her White van stories.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X