'வெள்ளை வேன் கதைகள்'... - லீனா மணிமேகலையின் மனதைப் பதற வைக்கும் படம்!

By Shankar

சென்னை: இலங்கையில் காணாமல் போன பல்லாயிரம் பேர்கள் மற்றும் அவர்களின் கண்ணீர் கதைகளை வெள்ளை வேன் கதைகள் என்ற பெயரில் படமாக்கியிருக்கிறார் செங்கடல் படம் தந்த லீனா மணிமேகலை.

எழுத்தாளரும் கவிஞருமான லீனா மணிமேகலை, மாற்று சினிமா முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

ஈழ அகதிகள் படும் துயரங்கள் குறித்த இவரது செங்கடல் உலகெங்கும் பெரும் வரவேற்பையும் விவாதங்களையும் எழுப்பியது. 30க்கும் மேற்பட்ட திரைப்பட விழாக்களில் பங்கெடுத்த இந்தப் படத்துக்கு விருதுகளும் கிடைத்துள்ளன.

Leena Manimegalai's White Van Stories screening in Chennai

இந்தப் படத்தையடுத்து வெள்ளை வேன் கதைகள் (White Van Stories) என்ற படத்தை இயக்கியுள்ளார் லீனா. இது ஒரு ஆவணப் படம்.

ஆனால், ரத்தமும் கண்ணீரும் தெறிக்கும் ஒரு உயிர்ப்பான படம். மனிதாபிமானத்தை மட்டுமே பிரதானப்படுத்தும் முக்கிய பதிவு.

குற்றங்களில் எல்லாம் கொடிய குற்றமான உயிர்களைக் காணாமல் போகடிக்கும் குற்றத்தை தொடர்ந்து செய்து வரும் இலங்கை அரசாங்கத்தை வெளிப்படுத்தும் படம்.

இலங்கையில், பல்லாயிரக்கணக்கான மக்கள் "காணாமல் போகடிக்கப்பட்ட" தங்கள் உறவுகளுக்காக வருடக்கணக்கில் தேடிக்கொண்டும், காத்திருந்தும் உழல்கின்றனர். கடந்த மூன்று தசாப்தங்களில் காணாமல் போகடிக்கப்பட்டவர்களின் கணக்கின்படி உலக அரங்கில் இலங்கை முதல் இடத்தைப் பிடிப்பதற்கு ஈராக்குடன் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஐந்து நாளுக்குமொருவர் இலங்கையில் இன்னும் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றனர்.

சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டவர்கள், வெள்ளை வேனில் கடத்தப்பட்டவர்கள், இயக்கப் போராளிகளாக சாட்சியங்களோடு சரண்டைந்தவர்கள், இயக்கத்தால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டு போராளிகளாக்கப்பட்டவர்கள், பத்திரிகையாளர்கள், கார்ட்டூனிஸ்டுகள், பாதிரியார்கள், மெளல்விகள், கலைஞர்கள், கேள்வி கேட்டவர்கள், கேள்வி கேட்காதவர்கள், மாணவர்கள், மீனவர்கள் என காணாமல் போகடிக்கப்பட்டவர்களின் கதைகளும் காரணங்களும் கொலைகார இலங்கை அரசுக்கு யாரும் தப்பவில்லை என்பதற்கு சாட்சி சொல்கின்றன.

"White Van Stories / வெள்ளை வேன் கதைகள்" காணாமல் போன உறவுகளின் 90 நிமிட விஷுவல் பெட்டிஷன்.

Leena Manimegalai's White Van Stories screening in Chennai

கடுமையான ராணுவ கட்டுப்பாட்டில் இருக்கும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளிலும் பயணம் செய்ததோடு, முஸ்லீம், சிங்களப் பகுதிகளைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட குடும்பங்களையும் சந்திந்து, கொரில்லா படப்பிடிப்பு நுட்பங்களுடன், உயிராபத்து அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும், வெள்ளை வேன் கதைகளை எழுதி இயக்கி தயாரித்திருக்கிறார் லீனா மணிமேகலை.

காமன்வெல்த் மாநாட்டையொட்டி சேனல் ஃஃபோர் தொலைக்காட்சியில் சிறப்பு ஒளிபரப்பை பெற்று,லண்டனில் வெளியிடப்பட்ட இந்தப் படம் முதன்முதலாக இந்தியாவில், சென்னையில் திரையிடப்படுகிறது.

இடம் ஆர்கேவி ப்ரிவியு தியேட்டர், 317 ஜி, என்.எஸ்.கே சாலை (ஆர்காட் ரோடு). (ரஹேஜா கம்ப்ளெக்ஸ் அருகில்), வடபழனி, சென்னை.

நேரம் மாலை 6 -9 மணி. நாள் 12 ஜனவரி 2014

இந்த சிறப்புத் திரையிடலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர் நல்லக்கண்ணு வருகிறார்.

மேலும் தமிழ் சினிமாவின் முக்கிய ஆளுமைகளான இயக்குநர்கள் பாரதிராஜா, பாலுமகேந்திரா, வெற்றி மாறன், வசந்த், ராதா மோகன், எடிட்டர் லெனின், எழுத்தாளர் சி மோகன், ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம், எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத், பத்திரிகையாளர் மாலன், பாலபாரதி எம்எல்ஏ, எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, ஓவியா, இயக்குநர் ஆர்வி ரமணி, இயக்குநர் அமுதன் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X