twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பூதாகரமாகி வரும் “காளி“ போஸ்டர் சர்ச்சை.. படத்தை பார்த்துட்டு பேசுங்க.. விளக்கமளித்த இயக்குநர்!

    |

    சென்னை : "காளி" போஸ்டரால் எழுந்துள்ள சர்ச்சை குறித்து லீனா மணிமேகலை விளக்கம் அளித்துள்ளார்.

    Recommended Video

    Leena Manimegalai-யின் ஆவண படத்தால் பாஜக-வினர் கொதிப்பு, “காளி” *TamilNadu | Oneindia Tamil

    கனடா நாட்டின் டொரண்டோவில் உள்ள அகா கான் அருங்காட்சியகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் காளி திரைப்படம் திரையிடப்பட்டதை அடுத்து, இயக்குநர் லீனா மணிமேகலை காளி போஸ்டரை இணையத்தில் பகிர்ந்து இருந்தார். அந்த போஸ்டர் தற்போது பெரும் புயலை கிளப்பி வருகிறது.

    இந்துக்கடவுள் குறிவைக்கப்படுவதாக கூறி சமூக வலைத்தள பக்கத்தில் காளி போஸ்டருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த மதத்தை அவமதித்த லீனா மணிமேகலையை கைது செய்யக்கோரியும் எதிர்ப்பு வலுத்து வருகிறது.

    அஜித் எப்பவும் அல்டிமேட் தான்...லண்டன் ஷாப்பிங்கில் அஜித் செய்த காரியம்...கொண்டாடும் ரசிகர்கள் அஜித் எப்பவும் அல்டிமேட் தான்...லண்டன் ஷாப்பிங்கில் அஜித் செய்த காரியம்...கொண்டாடும் ரசிகர்கள்

    லீனா மணிமேகலை

    லீனா மணிமேகலை

    தமிழில் பல்வேறு ஆவணப்படங்களை இயக்கிய லீனா மணிமேகலை. இவர் தற்போது "காளி" என்ற ஆவணப்படத்தை இயக்கியுள்ளார். நாடக பாணியிலான உருவாகி உள்ள இந்த ஆவணப்படத்தின் போஸ்டரில் காளிதேவி ஒரு கையில் LGBTQ சமூகத்தினரின் கொடியை ஏந்தியபடி, மறுகையில் சிகரெட் புகைப்பது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்து மத ஆர்வலர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

    லீனா மணிமேகலை மீது வழக்குப்பதிவு

    லீனா மணிமேகலை மீது வழக்குப்பதிவு

    டெல்லியைச் சேர்ந்த அஜய் கௌதம் என்பவரும், வினீத் ஜிண்டால் என்பவர் காளி போஸ்டர் தொடர்பாக டெல்லி காவல்துறையினரிடமும், மத்திய உள்துறை அமைச்சகத்திடமும் லீனா மணிமேகலை மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ட்விட்டரில் அவர் கைது செய்யக்கோரி #ArrestLeenaManimekalai என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாக்கி வருகிறது.

    இழப்பதற்கு ஒன்றுமில்லை

    இழப்பதற்கு ஒன்றுமில்லை

    காளி போஸ்டர் குறித்து எழுந்துள்ள சர்ச்சை குறித்து விளக்கம் அளித்துள்ள லீனா மணிமேகலை, எனக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. இருக்கும் வரை எதற்கும் அஞ்சாமல் நம்புவதைப் பேசும் குரலோடு இருக்க விரும்புகிறேன். அதற்கு விலை என் உயிர் தான் என்றால் தரலாம் என்று பதிவிட்டு இருந்தார்.

    "love you leena manimekalai"

    இதையடுத்து,தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரு மாலைப்பொழுது, டோரோண்டோ மாநகரத்தில காளி தோன்றி வீதிகளில் உலா வரும்போது நடக்கிற சம்பவங்கள் தான் படம். படத்தைப்பார்த்தா "arrest leena manimekalai" hashtag போடாம "love you leena manimekalai" hashtag போடுவாங்க என அவர் கூறியுள்ளார். இணையத்தில் காளி போஸ்டர் சர்ச்சை பூதாகரமாகி வருகிறது.

    English summary
    Leena Manimekalai explanation about Kaali poster
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X