டாக்டராக இருந்த என்னை காதலின் பெயரில் மோசம் செய்தான் சுகாஷ்!- லீனா மரியா வாக்குமூலம்

By Shankar

சென்னை: பெரிய டாக்டராக வேண்டும் என்ற லட்சியத்தோடு படித்து தொழிலைத் தொடங்கிய என்னை, சினிமா கதாநாயகி ஆசை காட்டி, பின் காதலியாகவும் ஆக்கி மோசம் செய்துவிட்டான் சுகாஷ், என்று போலீசில் வாக்குமூலம் கொடுத்துள்ளார் நடிகை லீனா மரியா பால்.

ரூ.19 கோடி வங்கி கடன் மோசடி வழக்கில் டெல்லியில் கைது செய்யப்பட்டு, சென்னை கொண்டுவரப்பட்ட மலையாள நடிகை லீனா மரியா பால் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலம்:

கவுரமான குடும்பம்

கவுரமான குடும்பம்

"எனது சொந்த ஊர் கேரள மாநிலம் திருச்சூர். கவுரவமான படித்த குடும்பத்தைச் தேர்ந்தவள் நான். என் தந்தை பால் துபாயில் எஞ்ஜினியராக வேலை பார்த்தார். இப்போதும் குடும்பம் துபாயில்தான் உள்ளது. அண்ணனும் என்ஜினீயர்தான்.

பல் டாக்டர்

பல் டாக்டர்

அவரும் துபாயில் நல்ல வேலையில் இருக்கிறார். எனது 2 தங்கைகளில் ஒருவர் டாக்டராக உள்ளார். என்னையும் எனது தந்தை பல் மருத்துவம் படிக்க வைத்தார். நானும் நன்றாக படித்து பல் டாக்டரானேன்.

டாக்டர் தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டிருந்தால் எனது நிலைமை இதுபோல் ஆகி இருக்காது. சினிமாவில் நடிக்க வந்ததுதான் எனது வாழ்க்கையை தடம் புரள வைத்துவிட்டது.

சுகாசுடன் தொடர்பு

சுகாசுடன் தொடர்பு

நான் மலையாள படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது, இணைய தளத்தில் சுகாஷ் என்னை தொடர்பு கொண்டார்.

அவர் தன்னை பிரபல இந்திப்பட இயக்குனர் என்று சொன்னார். பெங்களூரில் உள்ள பிரபல நகைக்கடை பெயரைச் சொல்லி அந்த நகைக்கடை உரிமையாளர் என்றும் சொன்னார். அவரது நகைக்கடை விளம்பரத்தில் முதலில் நடிக்க வேண்டும் என்றும், இதற்காக என்னை சந்திக்க விரும்புவதாகவும், இணையதளத்தில் தகவல் அனுப்பினார். மும்பையில் மாடல் அழகியாக இருக்கும் எனது தோழியின் காதலர் சுகாசுக்கு நெருங்கிய நண்பர்.

தோழி வீட்டில்

தோழி வீட்டில்

மும்மையில் உள்ள எனது தோழி வீட்டில் சுகாசை முதன், முதலில் சந்தித்தேன். அவர் என்னை இந்திப் படத்தில் கதாநாயகிஆக்கி, பாலிவுட்டில் பெரிய நடிகை ஆக்குகிறேன் என்று ஆசை காட்டினார்.

அவர் ஒரு மிகப்பெரிய மோசடி பேர்வழி என்று அப்போது எனக்கு தெரியாது. அவரை பெரிய இந்திப்பட இயக்குனர் என்று நினைத்துதான், அவரிடம் பழக ஆரம்பித்தேன்.

தமிழ்ப் பட நடிகர்

தமிழ்ப் பட நடிகர்

மேலும் சுகாசை தமிழ்ப் பட நடிகர் ஒருவரும், பிரபல நடன இயக்குனர் ஒருவரும் அடிக்கடி வந்து பார்ப்பார்கள். இதனால் சுகாசை சினிமாப்பட இயக்குனர் என்று நம்பினேன். அவர்களும் அதை உறுதிப்படுத்துவது போலவே நடந்து கொண்டனர்.

திருமண ஆசை...

திருமண ஆசை...

கடந்த 2010ஆம் ஆண்டிலிருந்து சுகாஷுடன் ஒன்றாக வாழ்கிறேன். என்னை இந்திப்பட கதாநாயகி ஆக்குவதாக சொன்ன சுகாஷ், அவரது ஆசைநாயகி ஆக்கிக்கொண்டார். என்னை திருமணம் செய்துகொள்வதாக சொல்லி ஆசை காட்டினார். அதை நம்பி என்னை அவரிடம் ஒப்படைத்தேன்.

2 முறை கருக்கலைப்பு

2 முறை கருக்கலைப்பு

ஆனால் தாலி கட்டி மனைவி ஆக்கிக்கொள்ளாமல் ஏமாற்றியபடி இருந்தார். அவர் என்னை மணந்து கொள்வார் என்று நம்பி, அவரோடு மனைவிபோல வாழ்ந்ததால், 2 முறை கர்ப்பம் ஆனேன். ஆனால் என்னை மிரட்டி கருவை கலைக்க வைத்துவிட்டார். இப்போது கூட நான் கர்ப்பமாக இருப்பதாக உணர்ந்து, கைது செய்யப்பட்ட அன்று கருவை கலைக்க மாத்திரை சாப்பிட்டேன். சுகாஷ் ஒரு மோசடி ஆசாமி என்று தெரிந்த பிறகு அவரை விட்டு விலக நினைத்தேன்.

போலீசில் மாட்டிவிட்டேன்

போலீசில் மாட்டிவிட்டேன்

பெங்களூர் போலீசில் கூட அவரை மாட்டிவிட்டேன். அவர் சிறைக்கு போனார். அதன்பிறகு அவர் என்னை ஒதுக்கிவிடுவார் என்று நினைத்தேன். ஆனால் அவர் மீண்டும் என்னை தேடிவந்து, என்னை உயிராக காதலிப்பதாக சொன்னார். மோசடி தொழிலை விட்டுவிடுவதாகவும் தெரிவித்தார். அதை நம்பி அவருக்கு என்னை அர்ப்பணித்து விட்டேன்.

கண்ணை மறைத்த பணம்

கண்ணை மறைத்த பணம்

அவரால் எனக்கு கிடைத்த சொகுசான வாழ்க்கை, அவர் மீண்டும் மோசடி செய்தாலும், அதை மறைத்துவிட்டது. மோசடியில் கோடி, கோடியாக பணம் கொட்டியது. அதை வைத்துதான் அவர் உலக பணக்காரர்கள் பயன்படுத்தும் 9 சொகுசு கார்களை வாங்கினார்.

அரசியல், அமைச்சர் பதவி

அரசியல், அமைச்சர் பதவி

மேலும் சுகாஷ் வருகிற நாடாளுமன்ற தேர்தலில், ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியில் சேர்ந்து எம்.பி.யாக திட்டமிட்டு இருந்தார். மத்திய அமைச்சராகவும் பவனி வருவேன் என்று என்னிடம் அவர் சவால் விட்டு சொல்லி இருந்தார். அதற்குள் போலீசில் நான் மாட்டிக்கொண்டேன்" என்று நடிகை லீனா வாக்குமூலம் அளித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X