சீக்கிரமே எங்களை விட்டு பிரிந்து விட்டீர்கள்... புனீத் மறைவிற்கு சிவகார்த்திகேயன் இரங்கல்!
சென்னை : கன்னட ஹீரோ புனீத் ராஜ்குமார் மாரடைப்பால் இன்றைய தினம் காலமானார்.
அவருக்கு இந்திய அளவில் அனைத்து நடிகர்கள் மற்றும் நடிகைகள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் டாக்டர் படத்தின் வீடியோ பாடல் வெளியீடும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

கன்னட சூப்பர்ஸ்டார்
கன்னடத்தில் சூப்பர்ஸ்டாராக இருந்த ராஜ்குமாரின் இளைய மகன் புனீத் ராஜ்குமார் இன்றைய தினம் மாரடைப்பால் காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்,

புனீத் மறைவு
அவருக்கு ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்திய அளவில் நடிகர்கள், நடிகைகள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். புனீத் அவருடைய தந்தையை போலவே பல சிறப்பான படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்றிருந்தார். இந்நிலையில் அவரது மறைவு அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகார்த்திகேயன் இரங்கல்
இதனிடையே நடிகர் சிவகார்த்திகேயன் ட்விட்டர் மூலம் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். வெகு விரைவில் புனீத் அனைவரையும் பிரிந்து சென்றதாக அவர் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது மறைவு அதிர்ச்சியையும் சோகத்தையும் அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

பாடல் வெளியீடு தள்ளி வைப்பு
மேலும் அவரது ஆத்மா சாந்தியடையவும் பிரார்த்தனை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, இன்று மாலை 5 மணியளவில் வெளியாக இருந்த டாக்டர் படத்தின் பேபி பாடல் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
Recommended Video

மாரடைப்பால் மரணம்
கன்னட திரையுலகின் முன்னணி நடிகராக வலம்வந்த புனீத் ராஜ்குமார், இன்று காலை வழக்கம்போல பெங்களுருவில் உள்ள தனது வீட்டில் உடற்பயிற்சி செய்துள்ளார். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு கவலைக்கிடமான நிலையில மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.

திரையுலகினர் அஞ்சலி
அவருக்கு பாலிவுட், கோலிவுட், டோலிவுட் மற்றும் கன்னட திரையுலகை சேர்ந்தவர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஏராளமான ரசிகர்கள் கண்ணீர் மல்க அவரது இல்லத்திற்கு சென்று அஞ்சலி செலுத்துவதற்காக காத்திருக்கின்றனர். இந்த மறைவு திரையுலகினர் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications











