twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பொன்னியின் செல்வனில் வரலாற்று உண்மைகள் மறைக்கப்பட்டதா...மணிரத்னம், விக்ரமிற்கு நோட்டீஸ்

    |

    சென்னை : டைரக்டர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் முதல் பாகத்தை செப்டம்பர் 30 ம் தேதி பிரம்மாண்டமாக உலகம் முழுவதும் ரிலீஸ் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    Recommended Video

    Ponniyin Selvan படத்திற்கு சிக்கலா? விக்ரம் மணிரத்னத்திற்கு நோட்டீஸ்?

    தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட உள்ள பொன்னியின் செல்வன் படத்தின் மோஷன் போஸ்டர், கேரக்டர்களின் அறிமுக போஸ்டர்கள் உள்ளிட்டவைகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இதைத் தொடர்ந்து படத்தின் டீசரும் வெளியிடப்பட்டது.

    டீசர் வெளியீட்டு விழாவில் விக்ரம் கலந்து கொள்ளாததால் பொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்காக விக்ரம் 5 மொழிகளில் டப்பிங் பேசிய மேக்கிங் வீடியோவையும் சமீபத்தில் படக்குழு வெளியிட்டது.

    யம்மாடி...5 பில்லியன் பார்வைகளா...அசத்தல் சாதனை படைத்த புஷ்பா யம்மாடி...5 பில்லியன் பார்வைகளா...அசத்தல் சாதனை படைத்த புஷ்பா

    சர்ச்சையை கிளப்பிய போஸ்டர்கள்

    சர்ச்சையை கிளப்பிய போஸ்டர்கள்

    படத்தின் ரிலீசிற்காக ரசிகர்கள் ஒரு புறம் காத்துக் கொண்டிருந்தாலும் மற்றொரு புறம் இந்த படத்திற்கு எதிராக தொடர்ந்து விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. கேரக்டர்களின் போஸ்டர்கள் வெளியிடப்பட்ட போது அதில், அருள்மொழி வர்மன் உள்ளிட்ட பெயர்கள் பிழையாக குறிப்பிடப்பட்டுள்ளதாக ஒரு சர்ச்சை எழுந்தது.

    இதுலயும் குழப்பம் தானா

    இதுலயும் குழப்பம் தானா

    அதைத் தொடர்ந்து டீசர் வெளியீட்டு விழாவில் படக்குழு சொதப்பியதாக பலரும் கிண்டலும், அதிருப்தியும் தெரிவித்தனர். இவற்றையும் தாண்டி படம் பற்றிய பல தகவல்கள் வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி வருகிறது. ஆனால் தற்போது பொன்னியின் செல்வன் படம் தொடர்பாக வழக்கறிஞர் ஒருவர் படக்குழுவிற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளர்.

    மணிரத்னத்திற்கு எச்சரிக்கை

    மணிரத்னத்திற்கு எச்சரிக்கை

    வழக்கறிஞர் செல்வம் என்பவர் அனுப்பி உள்ள நோட்டீசில், சோழ வம்சத்தை வைத்து படம் எடுக்கும் மணிரத்னத்திற்கு விஸ்வாசமாக இருக்கிறேன். ஆனால் வம்சத்தின் வரலாறு மறைக்கப்பட்டிருப்பது தெரியவந்தால் விஸ்வருபம் எடுப்போம். பொன்னியின் செல்வன் படத்தில் சோழர்களின் வரலாறு மறைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

    சோழர் வரலாறு மறைக்கப்பட்டதா

    சோழர் வரலாறு மறைக்கப்பட்டதா

    சோழ வம்சத்தில் நாமம் இடும் பழக்கம் இல்லாத போது, பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் பாத்திரத்தில் நடித்துள்ள விக்ரம் நெற்றியில் நாமம் இட்டுள்ளது தவறானது. பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் வரலாற்று உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளது. எனக்கு போட்டுக் காட்டாமல் படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது என அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மணிரத்னம், விக்ரமிற்கு நோட்டீஸ்

    மணிரத்னம், விக்ரமிற்கு நோட்டீஸ்

    படத்தின் டைரக்டர் மற்றும் தயாரிப்பாளர்களில் ஒருவர் என்ற முறையில் மணிரத்னத்திற்கும், ஆதித்த கரிகாலன் ரோலில் நடித்த விக்ரமிற்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. விக்ரமின் போஸ்டர் வெளியிடப்பட்ட போதே நெற்றியில் நாமம் இடப்பட்டது விவகாரம் எழுப்பப்பட்ட நிலையில் தற்போது சட்ட ரீதியாக நோட்டீசும் அனுப்பப்பட்டுள்ளது பரபரப்பை கிளப்பி உள்ளது.

    English summary
    Legal notice issued against director Maniratnam and actor Vikram on Ponniyin Selvan issue. Lawyer Selvam mentioned his notice that Chola's history was hidden in Maniratnam's Ponniyin Selvan.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X