twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'பிரதிநிதி போல செயல்படுகிறார்கள்..எச்சரிக்கையாக இருங்கள்..' நடிகர் அஜித் வழக்கறிஞர் திடீர் நோட்டீஸ்!

    By
    |

    சென்னை: நடிகர் அஜித்குமாரின் பிரதிநிதி போல சிலர் செயல்படுவதாகவும் அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அவர் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

    நடிகர் அஜித் இப்போது 'வலிமை' படத்தில் நடித்து வருகிறார். இதில் போலீஸ் அதிகாரியாக அவர் நடிக்கிறார்.

    'நேர்கொண்ட பார்வை'யை அடுத்து இந்தப் படத்தையும் ஹெச்.வினோத் இயக்கி வருகிறார்.

    ஷார்ட்ஸ் போட்டது ஒரு குத்தமாய்யா? வயதை சொல்லி விளாசிய நெட்டிசன்ஸ்.. நச் பதிலடி கொடுத்த டீனேஜ் நடிகை!ஷார்ட்ஸ் போட்டது ஒரு குத்தமாய்யா? வயதை சொல்லி விளாசிய நெட்டிசன்ஸ்.. நச் பதிலடி கொடுத்த டீனேஜ் நடிகை!

    கொரோனா காரணமாக

    கொரோனா காரணமாக

    ஶ்ரீதேவியின் கணவரும் இந்தி தயாரிப்பாளருமான, போனி கபூர் தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். அஜித் ஜோடியாக இந்தி நடிகை ஹூமா குரேஸி நடிக்கிறார். கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டுள்ள இந்தப் படத்தின் ஷூட்டிங் வரும் 21 ஆம் தேதி தொடங்க இருக்கிறது.

    அஜித்தின் ஆலோசகர்

    அஜித்தின் ஆலோசகர்

    இந்நிலையில் நடிகர் அஜித்குமாரின் அதிகாரபூர்வ சட்ட ஆலோசகரான எம்.எஸ்.பரத், திடீரென அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அஜித்குமார் பிரதிநிதி போல சிலர் செயல்படுவதாகவும் அவர்களுக்கும் அஜித்துக்கும் சம்பந்தமில்லை என்றும் கூறியுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: இந்த அறிக்கை, எங்கள் கட்சிக்காரர் அஜித்குமார் சார்பாகக் கொடுக்கப்படும் சட்ட அறிக்கை ஆகும்.

    சுரேஷ் சந்திரா

    சுரேஷ் சந்திரா

    சமீப காலமாக, சில தனிநபர்கள், பொதுவெளியில் என் கட்சிக்காரர் சார்பாகவோ, அல்லது அவரது பிரதிநிதி போலவோ அனுமதியின்றி தங்களை முன்னிலைப்படுத்தி வருவதாக, சில சம்பவங்கள் கவனத்துக்கு வந்துள்ளன. இதை முன்னிட்டு என் கட்சிக்காரர், தன்னுடன் பல வருடங்களாகப் பணியாற்றி வரும் அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா மட்டுமே, அனுமதி பெற்ற பிரதிநிதி என்கிறார்.

    வேண்டுகோள்

    வேண்டுகோள்

    அவர் மட்டும் தன் சமூக மற்றும் தொழில்ரீதியான நிர்வாகி என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கிறார். மேலும் தன்னுடைய பெயரைப் பயன்படுத்தி எந்த ஒரு தனி நபரோ, நிறுவனமோ, யாரையேனும் அணுகினால், அந்த தகவலை சுரேஷ் சந்திராவிடன் உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கிறார்.

    பொறுப்பு இல்லை

    பொறுப்பு இல்லை

    இதை மீறி இத்தகைய நபர்களிடம் தன் சம்பந்தமாக யாரும் தொழில் மற்றும் வர்த்தக ரீதியாக தொடர்பில் இருந்தால், அதனால் ஏதேனும் பாதகம் ஏற்பட்டால், அதற்கு என் கட்சிக்காரர் எந்த விதத்திலும் பொறுப்பு இல்லை. அதோடு, பொதுமக்களும் இத்தகைய நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    English summary
    Ajith Kumar lawyer said that some people are acting like a representative of Ajith and they should be wary of them.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X