twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விக்ரம் படக்குழுவிற்கு எதிராக தமிழகம் முழுவதும் நோட்டீஸ்

    |

    சென்னை : நடிகர் கமலஹாசன், அனிருத், லோகேஷ் கனகராஜ், சோனி மியூசிக் கம்பெனி,ரெட் ஜெய்ன்ட் மூவிஸ், மகேந்திரன்- விஜய் நெட்வொர்க் ஆகியோர்களுக்கு சென்னை, மதுரை மற்றும் தி௫நெல்வேலி வழக்கறிஞர்கள் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

    Legal notice issued against Vikram movie team

    நடிகா் கமலஹாசன் நடித்த விக்ரம் படம் வ௫ம் ஜுன் 03 ஆம் தேதி வெளிவர உள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளாக கமல் எழுதி பாடிய பத்தல பத்தல பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. "பத்தல பத்தல" என்ற பாடலில் மத்திய அரசை திருடன் என்றும், ஜாதிய ரீதியாக பிரச்சனைகளை தூண்டும் வகையிலும் அமைந்துள்ள வரிகளை நீக்கக் கோரியும் நடிகர் கமலஹாசன், அனிருத், லோகேஷ் கனகராஜ், சோனி மியூசிக் கம்பெனி,ரெட் ஜெய்ன்ட் மூவிஸ் , மகேந்திரன்- விஜய் நெட்வொர்க் ஆகியோர்களுக்கு, ஆர்.டி.ஐ.செல்வம் சாா்பில் வழக்கறிஞர்கள் சென்னை சாிதா, திருநெல்வேலி துரைராஜ் மற்றும் மதுரை துரைராஜ் ஆகியோர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

     சமுத்திரகனி அந்த சின்ல பயங்கரமா நடித்துக் காட்டிட்டார்... டான் இயக்குனர் சி பி சக்கரவர்த்தி புகழாரம்! சமுத்திரகனி அந்த சின்ல பயங்கரமா நடித்துக் காட்டிட்டார்... டான் இயக்குனர் சி பி சக்கரவர்த்தி புகழாரம்!

    நோட்டீஸ் கிடைக்கப் பெற்ற இரண்டு நாட்களுக்குள் நடிகர் கமல்ஹாசன் உாிய பதில் அளிக்காவிட்டால் அனைத்து இணைய தளங்களிலும் பதிவேற்றப்பட்ட விக்ரம் படத்தின் "பத்தல பத்தல" பாடலை நீக்க கோரி யூடியூப் இந்தியா மற்றும் பிற இணையதளங்களுக்கு முறையாக நோட்டீஸ் அனுப்பப்படும் என அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தில் புகார் அளிக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்துள்ள விக்ரம் படத்தை ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். நான்கு வருடங்களுக்கு பிறகு வெளியாகும் கமல் படம் என்பதால் எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே உள்ளது. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ள இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட உள்ளது.

    விக்ரம் படத்தின் டிரைலர், ஆடியோ நேற்று வெளியிடப்பட்ட நிலையில் ப்ரோமோஷன் வேலைகள் துவங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்திற்கே சிக்கல் வரும் நிலையில் படக்குழுவை சேர்ந்தவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ரிலீசிற்கு அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ள நிலையில் படத்திற்கு ஏற்பட்டுள்ள இந்த புதிய சிக்கல் ரசிகர்களை அப்செட் ஆக வைத்துள்ளது.

    English summary
    Legal notice against Vikarm movie team all over Tamilnadu. With in two days movie team would reply for this notice. If movie team failed to reply for this notice, Vikram song will removed from all sites.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X