டுபாக்கூர் விவகாரம்.. வலுக்கும் எதிர்ப்பு.. பிக்பாஸுக்கு லீகல் நோட்டீஸ் அனுப்ப ஜோ மைக்கேல் முடிவு!
சென்னை: சனம் ஷெட்டி பங்கேற்ற அழகிப்போட்டியை டுபாக்கூர் என்று கூறிய பாலாஜி முருகதாஸுக்கு லீகல் நோட்டீஸ் அனுப்பப்படும் என்று ஜோ மைக்கேல் தெரிவித்துள்ளார்.
Recommended Video
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பாலாஜி முருகதாஸ் தனது அப்பா அம்மாவை குடிகாரர்கள் எனக்கூறி ஒரே நாளில் பெரும் பிரபலமானார்.
குடிக்கார அப்பாவும் அம்மாவும் தன்னை பற்றி கவலையே படவில்லை என்றார். மேலும் ஒரு குழந்தையை பெற்று ஒழுங்காக வளர்க்க தெரியாதவர்களுக்கு எதற்கு குழந்தை என்றும் விளாசினார்.

பாலாஜி சொன்ன பொய்
இதனால் ஓவர் நைட்டில் ஹீரோவானார் பாலாஜி முருகதாஸ். ஆனால் அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் அவரது முகத்திரையை கிழித்து விட்டது. குறிப்பாக அவர் தனது குடும்பத்தை பற்றி சொன்னதெல்லாம் பொய் தான் பிக்பாஸ் வீட்டில் நீடிக்க வேண்டும் என்பதற்காக பொய் சொன்னதாக தெரியவந்துள்ளது.

டுபாக்கூர் அழகிப்போட்டி
இதனால் சமூக வலைதளங்களிலும் அவர் குறித்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சனம் ஷெட்டி பங்கேற்ற அழகிப் போட்டியை டுபாக்கூர் அழகிப் போட்டி என்றார். இதனால் கடுப்பான சனம் ஷெட்டி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

விளாசிய கமல்
இந்த விவகாரம் குறித்து நேற்று அலசிய கமல், பொறுப்புடன் பேச வேண்டும், எப்படி டுபாக்கூர் என்று சொல்லலாம் என கேட்டு பாலாஜி முருகதாஸை விளாசி தள்ளினார். அதோடு இனிமேல் இப்படி நிகழாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் எச்சரித்தார்.

குறைத்து மதிப்பிடக்கூடாது
இந்நிலையில் அந்த அழகிப் போட்டியின் ஏற்பாட்டாளரான ஜோ மைக்கேல், ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் டுபாக்கூர் பெஜன்ட்டில் ஒருவர் வெற்றி பெறுகிறார் என்றால் அதற்கான உழைப்பை அவர் போட்டிருப்பார். யாருடைய உழைப்பையும் நாம் குறைத்து மதிப்பிடக்கூடாது.

மிஸ்டர் மிஸ் சவுத் இந்தியா
கமல் சாரிடம் பேசும் போது தான் கன்டெக்ட் செய்த ஈவென்ட் என்று மிஸ்டர் மிஸ் சவுத் இந்தியா என்று கூறினார். அவர் கன்டெக்ட் செய்த போட்டியின் பெயரை கூட அவருக்கு சொல்ல தெரியவில்லை.

ஃபேஸ்புக் புரஃபைல்
ரொம்ப லோவில் இருந்த ஃபேமிலி என்று கூறினார். தனக்கு யாரும் உதவி செய்யவில்லை. கஷ்டப்படும் குடும்பம், நண்பர்கள் தான் காசு கொடுத்து உதவினார்கள் என்றார். ஆனால் அவரது இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் புரஃபைல் அப்படி சொல்லவில்லையே. அதுதான் உண்மையான டுபாக்கூர்.

லீகல் நோட்டீஸ்
தங்களின் அழகிப் போட்டியை டுபாக்கூர் அழகிப்போட்டி என்று கூறியது குறித்து அவர் பதில் சொல்லியாக வேண்டும், மன்னிப்பு கேட்க வேண்டும். அதுக்கனா லீகல் பிரச்சனையை அவர் சந்திப்பார். அவருக்கு லீகல் நோட்டீஸ் அனுப்பப்படும். எந்த மீடியத்தில் இருந்து அவர் டுபாக்கூர் என்று கூறினாரோ அதே மீடியத்தில் இருந்து அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு ஜோ மைக்கேல் கூறினார்.


Click it and Unblock the Notifications











