For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  எதுக்கு பஸ் பஸ்ஸா ஏறிக்கிட்டு... பேசாம திருட்டு விசிடிய சட்டப்பூர்வமாக்கிடுங்க... சுரேஷ் காமாட்சி

  By Shankar
  |

  சென்னை: எதற்காக பஸ் பஸ்ஸாக ஏறிப் போய் திருட்டு விசிடியைப் பிடிக்க வேண்டும். பேசாமல் திருட்டு விசிடியை சட்டப்பூர்வமாக்கி விடுங்கள்.. வருமானமாவது கிடைக்கும், என்று அதிரடி தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பரபரப்பாகப் பேசினார்.

  லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள 'பகிரி' என்கிற படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை ஆர்.கே.வி.ஸ்டுடியோவில் இன்று நடைபெற்றது. பாடல்களை இயக்குநர் வசந்தபாலன் வெளியிட்டார். பிரபல ஒளிப்பதிவாளர் செழியன் பெற்றுக்கொண்டார்.

  இவ்விழாவில் இயக்குநர்கள் வசந்தபாலன், ஏ.வெங்கடேசன், ரவிமரியா, சமுத்திரக்கனி, டி.பி.கஜேந்திரன், ஐந்து கோவிலான், மாரிமுத்து, இப்படத்தை எழுதி தயாரித்து இயக்கியுள்ள இயக்குநர் இசக்கி கார்வண்ணன், ஒளிப்பதிவாளர்கள் செழியன், வீரக்குமார், நடிகைகள் நமீதா, சாக்ஷி அகர்வால், 'பகிரி' நாயகன் பிரபு ரணவீரன், நாயகி ஷார்வியா, ஆதிரா, ரேகாநாயர், படத் தொகுப்பாளர் அத்தியப்பன் சிவா, 'ஹரிதாஸ்' வசனகர்த்தா ஏ.ஆர் வெங்கடேசன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

  Legalise DVD release of new movie to kill piracy - Suresh Kamatchi

  சமீப காலமாக தமிழ் சினிமா மேடைகளைக் கலக்கி வரும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் பேச்சுதான் இந்த விழாவிலும் ஹைலைட்.

  "நாங்கள் இந்த 'பகிரி' இயக்குநர் இசக்கி கார்வண்ணன் எல்லாருமே ஒரே ஆலமரத்திலிருந்து வந்த விழுதுகள்.. இப்படத்தின் இசையமைப்பாளர் கருணாஸ் ஜல்லிக்கட்டு பற்றி சட்டசபையில் பேசியிருக்கிறார். மகிழ்ச்சி.

  இன்று தமிழ் சினிமா குற்றுயிரும் குலையுயிருமாக இருக்கிறது. சிறு படங்களுக்கு ஒரே நம்பிக்கை ஊடகங்கள்தான். ஆனால் படம் பார்த்து விமர்சனங்கள் பத்திரிகைகளில் வருவதற்குள் திரையரங்கில் படம் இருப்பதில்லை. தூக்கி விடுகிறார்கள்.

  இன்று சினிமாவை யாரும் பார்க்காமலில்லை. திருட்டு விசிடியில் கூட காசு கொடுத்துதான் சினிமா பார்க்கிறார்கள். இணைய தளங்களில் பதிவிறக்கம் செய்யக்கூட காசு கொடுக்க வேண்டியுள்ளது. திரையரங்கில் போய்ப் பார்க்க ஒரு குடும்பத்துக்கு 2000 ரூபாய் செலவாகிறது. பார்க்கிங் கட்டணமே சில நூறு ரூபாய்களாகிவிட்டது.

  ஏன் எல்லாரையும் திரையரங்கு போய் படம் பார்க்கக் கட்டாயப்படுத்த வேண்டும் ? கள்ளச் சாராயத்தை ஒழிக்க டாஸ்மாக் வந்தது போல் திருட்டு விசிடியை ஒழிக்க அதையும் சட்டப்பூர்வமாக்கிவிடுங்கள். எதற்காக விஷால் பஸ் பஸ்ஸாக ஏறி இறங்கி திருட்டு விசிடியைப் பிடித்துக் கொண்டிருக்க வேண்டும்!

  டிவிடி வடிவில் வரும் வருமானத்தை ஏன் நாம் இழக்க வேண்டும்? திரையரங்கிற்கு மக்கள் வரவில்லை என்கிறார்கள். சினிமா டிக்கெட்டை விட பார்க்கிங் கட்டணம் அதிகம். பார்க்கிங்கிற்கே 250 ரூபாய் செலவாகிறது. பின் திரையரங்கிற்கு எப்படி வருவார்கள்?

  காலை, மதியம் காட்சிக்கு கேண்டீனில் வியாபாரம் இல்லையென்றால் படத்தைத் தூக்கி விடுகிறார்கள். கேண்டீனில் வியாபாரம் செய்வதற்கா தயாரிப்பாளர்கள் கஷ்டப்பட்டுப் படம் எடுக்கிறார்கள்?

  தயாரிப்பாளர்கள் இவ்வளவு கஷ்டப்பட்டு படம் எடுக்கிறோம். ஆனால் காலைக் காட்சிக்குக் கூட முழுதாக கூட்டம் வரவில்லை. ஆனால் அதில் நடித்த நடிகர் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் கேட்கிறார்.

  இவை எல்லாமே மாறவேண்டும். திரையரங்கிற்கு படம் கொடுக்கும் போது ஏன் சதவிகித அடிப்படையில் வியாபரம் செய்ய மறுக்கிறார்கள்?'' என்றார்.

  முன்னதாக புதிதாகத் தேர்வான தென்னிந்திய திரைப்பட மக்கள் தொடர்பாளர் யூனியனின் நிர்வாகிகள் தலைவர் டைமண்ட் பாபு, செயலாளர் ஏ.ஜான்,பொருளாளர் விஜய முரளி, துணைத்தலைவர் வி.கே. சுந்தர், இணைச்செயலாளர் யுவராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் 'பகிரி' படக் குழுவின் சார்பில் பொன்னாடை அணிவித்துக் கௌரவிக்கப்பட்டனர்.

  English summary
  Producer Suresh Kamatchi urged the film industry to legalise DVD release of new movies to avoid piracy.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X