Don't Miss!
- News
மோடி ஆவணப்படம் vs காஷ்மீர் ஃபைல்ஸ்..இடதுசாரி, பாஜக மாணவர்களால் ஹைதராபாத் பல்கலையில் டென்ஷன்!
- Automobiles
ஷோரூம்களுக்கு வர தொடங்கிய மாருதியின் விலை குறைவான கார்! திருவிழா மாதிரி பொதுமக்கள் கூட்டம் கூடுதாம்!
- Sports
விறுவிறுப்புக்கு நோ பஞ்சம்.. இந்தியா - நியூசி, முதல் டி20 போட்டி.. விருந்து படைக்கும் ராஞ்சி பிட்ச்!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
அடுத்த அதிரடிக்கு ரெடி, முன்னணி டைரக்டர்களிடம் கதை கேட்கும் லெஜண்ட் அண்ணாச்சி: இது கொஞ்சம் மாஸ் தான்
சென்னை: மிகப் பெரிய தொழிலதிபரான அண்ணாச்சி சரவணன், தற்போது லெஜண்ட் சரவணனாக அவதாரம் எடுத்துள்ளார்.
'தி லெஜண்ட்' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான அண்ணாச்சிக்கு, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.
லெஜண்ட் அண்ணாச்சி தற்போது தனது அடுத்தப் படத்திற்கான வேலைகளில் பிஸியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
சீதா
ராமம்
5
நாட்களில்
33
கோடி
வசூல்:
சக்சஸ்
மீட்டில்
ஸ்டைலாக
என்ட்ரி
கொடுத்த
துல்கர்,
மிருணாள்

தொழிலதிபர் டூ ஹீரோ அவதாரம்
தமிழகத்தின் மிகப் பெரிய தொழிலதிபராக வலம் வரும் லெஜண்ட் அண்ணாச்சி, தனது நிறுவனத்தின் விளம்பரங்களில் நடித்து வந்தார். ஹன்சிகா, தமன்னா என முன்னணி நடிகைகளுடன் ஸ்டைலாக ஆட்டம் போட்ட அண்ணாச்சி, திரைப்படத்தில் ஹீரோவாகவும் முடிவு செய்தார். முதலில் இதை பலரும் நம்பவில்லை. ஆனால், சொல்லி அடித்த கில்லியாக 'தி லெஜண்ட்' படத்தில் ஹீரோவாக மாஸ் காட்டினார் அண்ணாச்சி.

திரையரங்குகளில் வெளியான தி லெஜண்ட்
ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் லெஜண்ட் அண்ணாச்சி, ஊர்வசி ரவுத்தெலா, விவேக், பிரபு, விஜயகுமார் என, பெரும் நட்சத்திரப் பட்டாளமே 'தி லெஜண்ட்' படத்தில் நடித்திருந்தனர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் பட்டையை கிளப்ப, படமும் திரையரங்குகளில் வெளியானது. சயிண்ட்டிஸ்ட்டாக தரமான எண்ட்ரி கொடுத்த லெஜண்ட் அண்ணாச்சி, ஆக்சன், செண்டிமெண்ட், காதல் என வெரைட்டியாக நடித்திருந்தார். இந்தப் படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

ஹீரோ ஹீரோ தான்
இந்நிலையில், தி லெஜண்ட் படத்தில் அண்ணாச்சியின் நடிப்பை சிலர் கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர். ஆனால், அவை எதற்கும் மனம் தளராத அண்ணாச்சி, யார் என்ன சொன்னாலும் தொடர்ந்து ஹீரோவாக நடிப்பேன் எனக் கூறி அசால்ட் செய்தார். "ஹீரோவாக நடிப்பதற்கான தகுதி தன்னம்பிக்கை மட்டுமே, என்னால் முடியும் என நினைத்துவிட்டால் எதையும் செய்து முடிப்பேன்" என உறுதியாகக் கூறியிருந்தார்.

அடுத்த படமும் கமர்சியல் தான்
'தி லெஜண்ட்' படம் முழுக்க முழுக்க கமர்சியலாகவும், குடும்பத்துடன் பார்க்கும் வகையிலும் எடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தனது அடுத்த படம் குறித்து தீவிர ஆலோசனையில் இருக்கும் அண்ணாச்சி, அதையும் கமர்சியலாக எல்லோரும் பார்க்கும் படமாக இருக்க வேண்டும் என கூறி வருகிறாராம். அதற்காக பல இயக்குநர்களிடம் கதை கேட்டு வரும் அண்ணாச்சி, காதல், ஆக்சன், காமெடி என எல்லாமே இருக்கும் கதையை தேர்வு செய்ய உள்ளாராம். இதனால், சீக்கிரமே தனது அடுத்த படம் பத்தின மாஸ் அப்டேட்டை அண்ணாச்சி வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.