எகிறி எகிறி அதிரடி காட்டும் அண்ணாச்சி - பட்டையக் கிளப்பும் ‘தி லெஜண்ட்’ 3வது சிங்கிள் வெளியானது
சென்னை: வியாபாரத்துறையில் விளம்பரப்படங்களில் தானே நடிக்கும் ட்ரெண்டை உருவாக்கியவர் லெஜண்ட் அண்ணாச்சி
Recommended Video
இவர் சினிமா நடிகைகளுடன் பாடல் பாடி எடுத்த கடை விளம்பரம் பார்வையாளர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது.
இந்நிலையில் சினிமாவிலும் கால் பதித்துள்ள அண்ணாச்சியின் தி லெஜண்ட் படம் ரிலீசாக உள்ள நிலையில் மூன்றாவது கலர்ஃபுல் பாடல் வெளியாகியுள்ளது.

அண்ணாச்சி... அண்ணாச்சி...
அனைவராலும் அண்ணாச்சி என அல்டிமேட்டாக அழைக்கப்படும் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளார் சரவணன, ஹீரோவா அதிரடி காட்டப் போறார். பிஸினஸ்ல கம்பீர நடை போட்ட அண்ணாச்சி, அவரோட கடை விளம்பரங்கள் மூலமா சின்னதிரைல சீறிப் பாஞ்சிட்டு இருந்தார், தமன்னா, ஹன்சிகான்னு கோலிவ்ட் குயின்களோட ஆட்டம் போட்ட அவரு, ஹீரோவாகவும் கலக்க முடிவெடுத்துட்டார்.

நடிச்சா ஹீரோ தான்...
அப்படித்தான் ஆரம்பமானது 'தி லெஜண்ட்' மூவி. விளம்பர படங்கள் மூலமா பிரபலமான ஜேடி - ஜெர்ரி டைரக்ஷன்ல அண்ணாச்சியும் அவருக்கு ஜோடியா ஊர்வசி ரவுத்தெலா நடிக்க, பிரபு மறைந்த காமெடி நடிகர் விவேக் நாசர், யோகிபாபு இப்படி பெரிய நட்சத்திரப் பட்டாளங்களோட உருவாகிருக்கு 'தி லெஜண்ட்.' ஹீரோவா நடிக்குறது மட்டும் இல்லாம லெஜண்ட் சரவணாவே இந்தப் படத்தையும் பயங்கர பிரமாண்டமா தயாரிச்சிருக்கார்,

அடிச்சு தூக்குன ட்ரெய்லர்
'தி லெஜண்ட்' ஷூட்டிங் ஆரம்பமானதுல இருந்தே இந்தப் படத்தோட எதிர்பார்ப்பு எகிற ஆரம்பிச்சிருந்துச்சு. அதெல்லாத்தையும் மட்டும் இல்லாம தமிழ் சினிமாவோட டாப் நடிகர்களோட சமீபத்திய படங்களின் ட்ரெய்லருக்கே சவால் விட்டுருந்துச்சு 'தி லெஜண்ட்' ட்ரெய்லர். கொஞ்ச நாட்களுக்கு முன்னாடி ரிலீஸாகிருந்த இந்த ட்ரெய்லர், ஆக்சன், காமெடி, செண்டிமெண்ட், சயின்ஸ் இப்படி நாலப்பக்கமும் ரவுண்டு கட்டுன பக்கா கமர்சியலா இணையத்த தெறிக்க விட்டுருந்துச்சு.

இது டான்ஸ் இல்ல கண்ணா! ஸ்டைல் & மாஸ்
'தி லெஜண்ட்' மூவில எந்த குறையும் இருக்கக் கூடாதுன்னு கோலிவுட்டோட டாப் டெக்னீஷியன்ஸ்ஸ பார்த்து பார்த்து தட்டித் தூக்கிருந்த அண்ணாச்சி, மியூசிக்காக ஹரிஸ் ஜெயராஜ்-ஜ கமிட் பண்ணிருந்தார். அவரும் ரொம்ப நாளாவே ஃபீல்ட் அவுட்டா இருந்ததால கிடைச்ச சான்ஸ்ல மரண மாஸ் காட்டணும்ன்னு நினைச்சாரா என்னவோ.? படத்துல ஒவ்வொரு பாட்டையும் வெரைட்டி வெரைட்டியா கொடுத்து, ரசிகர்களையே மெர்சல் பண்ணிருந்தார். "ஹ்ரிஸ் மியூசிக்ல கலக்குனா, நான் டான்ஸ்ல டஃப் கொடுப்பேன்னு", அண்ணாச்சியு ராஜபாட்டை போட்டு அசத்திருக்கார்ன்னு சொல்லலாம். 'தி லெஜெண்ட்' படத்துல இருந்து ஏற்கனவே ரெண்டு பாடல்கள் ரிலீஸாகி, ரசிகர்கள்ல ரவுசு கொட்ட வச்சுருந்துச்சு. இப்போ ரிலீஸானா மூணாவது பாட்டும் செம்ம வைரலாகிட்டு இருக்கு.

ராப் ஸ்டைல்ல ரகிட ரகிட மறைந்த கேகேவின் மயக்கும் குரலில்
"போப்போ... போப்போ"ன்னு தொடங்குற இந்தப் பாட்ட மதன் கார்க்கி எழுத, பிரசாந்த் எஸ்.என், ஜோனிட்டா காந்தி இவங்களோட சேர்ந்து மறைந்த கே.கேவும் பாடியிருக்கார். ராப் ஸ்டைல்ல ஹாரிஸோட எனர்ஜிட்டிக் மியூசிக்ல உருவாகிருக்குற "போப்போ போப்போ" சாங்ல அண்ணாச்சி செம்ம அதகளமா டான்ஸ் ஆடி அமர்க்களம் பண்ணிருக்கார். "தி லெஜண்ட்" ஜூலை 28ம் தேதி ரிலீஸாகப் போறது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











