twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சின்னக் கண்ணன் அழைக்கிறான்... அந்த கண்ணனையே மெய் மறக்க வைத்த பாட்டு!

    By Shankar
    |

    கர்நாடக இசையின் பிதாமகனாப் போற்றப்படும் மங்கலம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா, திரையிசையிலும் அழுத்தமான முத்திரைப் பதித்தவர்.

    தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம் போன்ற மொழிகளில் கீர்த்தனை, பாடல்கள், வர்ணம், ஜாவலி, தில்லானா என அவர் உருவாக்கிய இசைப் படைப்புகள் மட்டும் 400-க்கும் அதிகம்.

    ஒரு பாடகராக அவர் அறிமுகமானது சதி சாவித்ரி தெலுங்குப் படத்தில். தமிழில் கலைக்கோயில் படத்தில் அவர் பாடிய தங்கரதம் வந்தது வீதியிலே... பாடல் பெரிய ஹிட்.

    Legend Balamuralikrishna's unforgettable songs

    திருவிளையாடல் படத்தில் இடம்பெற்ற ஒரு நாள் போதுமா... பாடலைக் கேட்டுத் திளைக்க ஒரு நாள் போதாது. குரலில் அத்தனை பாவங்கள் காட்டி கிறங்கடிப்பார் பாலமுரளி கிருஷ்ணா.

    ஏவிஎம் தயாரித்த தெலுங்குப் படமான பக்த பிரகலாதாவில் நடிகராகவும் அறிமுகமானார். நாரதர் வேடம். அத்துடன் மூன்று பாடல்களையும் பாடினார்.

    இளையராஜா இசையில் பாலமுரளிகிருஷ்ணா பாடிய முதல் பாடல் கவிக்குயில் படத்தில் இடம் பெற்றது. 'சின்னக் கண்ணன் அழைக்கிறான்...' பாடல் இன்று கேட்பவரை மெய் மறக்கச் செய்யும். அந்தப் பாடலின் சரணங்களை அவர் பாடும் அழகே அலாதியாக இருக்கும்.

    கண்கள் சொல்கின்ற கவிதை
    இளம் வயதில் எத்தனை கோடி

    என்றும் காதலைக் கொண்டாடும் காவியமே
    புதுமை மலரும் இனிமை
    அந்த மயக்கத்தில் இணைவது உறவுக்குப் பெருமை

    இதில் ஒவ்வொரு வரியையும் அவர் பாடும்போது குரலில் அத்தனை சங்கதிகள்.. சொக்க வைக்கும் பாவங்கள்.

    நெஞ்சில் உள்ளாடும் ராகம்
    இதுதானா கண்மணி ராதா

    உன் புன்னகை சொல்லாத அதிசயமா
    அழகே இளமை ரதமே
    அந்த மாயனின் லீலையில் மயங்குது உலகம்...

    இந்தப் பாடலை கடவுள் கண்ணன் கேட்டு நிச்சயம் மெய்மறந்திருப்பான் என்றார்கள் இசை அன்பர்கள். அத்தனை இனிமை, நேர்த்தி.

    இந்தப் பாடலுக்குப் பிறகு நிறைய வாய்ப்புகள் வந்தும்கூட, கர்நாடக இசைக் கச்சேரிகள், புதிய ராக ஆராய்ச்சிகளில் பிஸியாக இருந்துவிட்டார் பாலமுரளி கிருஷ்ணா.

    இந்தப் பாடலுக்குப் பிறகு நூல் வேலி படத்தில், "மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே..." என்ற பாடலை பாடினார்.

    எம்ஜிஆருக்காக நவரத்னம் படத்தில், "குருவிக்கார மச்சானே..." என்ற ஜனரஞ்சகப் பாடலைப் பாடினார்.

    லேட்டஸ்டாக அவர் பாடிய பாடல் பசங்க படத்தில் இடம்பெற்ற அன்பாலே அழகான வீடு.

    ஆதி சங்கராச்சார்யா, பகவத் கீதா உள்ளிட்ட சில படங்களுக்கு அவர் இசையமைத்தும் உள்ளார்.

    2011-ல் சென்னையில் இளையராஜா நடத்திய இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற பாலமுரளிகிருஷ்ணா சின்னக் கண்ணன் அழைக்கிறான் பாடலைப் பாடி ரசிகர்கள் அனைவரையும் பரவசப்படுத்தினார்.

    English summary
    Here is the list of late legend Balamuralikrishna's famous Tamil songs sung by him.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X