Legend: "காக்கா, கழுகு கதையால் எந்த பிரயோஜனமும் இல்ல..” சூப்பர் ஸ்டாரை கலாய்த்த லெஜெண்ட்!

சென்னை: சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரான லெஜெண்ட் சரவணன், சினிமாவிலும் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார்.

கடந்தாண்டு வெளியான தி லெஜெண்ட் மூவி மூலம் என்ட்ரி கொடுத்த அவர், அடுத்தப் படத்துக்கு கதை கேட்டு வருகிறார்.

Legend: Legend Saravanan trolled Rajinikanth and his Kutty stories

இதனிடையே சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற லெஜெண்ட் சரவணன், சூப்பர் ஸ்டாரை மறைமுகமாக கலாய்த்துள்ளார்.

காக்கா, கழுகு கதைகளால் எந்த பிரயோஜனமும் இல்லை என அவர் பேசியது வைரலாகி வருகிறது.

சூப்பர் ஸ்டாருக்கு பஞ்ச் வைத்த லெஜெண்ட்
சென்னை தியாகராய நகரின் மிக முக்கியமான அடையாளங்களில் ஒன்றாக மாறிவிட்டது சரவணா ஸ்டோர்ஸ். மிகப்பெரிய வணிக நிறுவனமான சரவணா ஸ்டோர்ஸின் உரிமையாளரான லெஜெண்ட் சரவணன், தனது கடை விளம்பரங்களில் நடித்து வந்தார். ஹன்சிகா, தமன்னா ஆகியோருடன் விளம்பரங்களில் ஆட்டம் போட்ட ஜெஜெண்ட், அப்படியே சினிமாவிலும் ஹீரோவானார்.

அதன்படி, ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் உருவான தி லெஜெண்ட் என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானார் லெஜெண்ட் சரவணன். ஆக்‌ஷன், சென்டிமென்ட், ரொமான்ஸ் என அனைத்து ஏரியாக்களிலும் மாஸ் காட்டினார். இதனால் அவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது. பான் இந்தியா படமாக வெளியான தி லெஜெண்ட் எதிர்பார்த்தளவிற்கு வெற்றிப் பெறவில்லை என்றாலும், லெஜெண்ட் சரவணனுக்கு செம்ம மாஸ் கிடைத்தது.

இதனையடுத்து தனது அடுத்தப் படத்திற்கான கதை கேட்பதில் பிஸியாக இருக்கிறார் லெஜெண்ட். அதேநேரம் அடிக்கடி தனது கெட்டப்புகளை மாற்றி கலக்கலான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதேபோல் சமீபத்தில் ஆட்டோ ஓட்டுநர்களுடன் ஆயுத பூஜையை கொண்டாடியதும் வைரலானது. இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினியை கலாய்த்துள்ளார் லெஜெண்ட் சரவணன்.

அதாவது, “சினிமா துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதில் காக்கா, கழுகு கதைகளால் எந்த பிரயோஜனமும் இல்லை. அதேபோல், அவருக்கு அந்தப் பட்டம், இவருக்கு இந்தப் பட்டம் என சொல்வதிலும் எந்த பயனும் கிடையாது. நாம் உழைத்தால் மட்டுமே உயர முடியும். நாம் உயர்ந்தால் நம் நாடு உயரும், அன்பால் இணைந்து செயல்படுவோம்” என பேசியுள்ளார்.

ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி தான் காக்கா, கழுகு கதை கூறி ரசிகர்களுக்கு வைப் கொடுத்திருந்தார். அதேபோல், தனது சூப்பர் ஸ்டார் டைட்டில் பற்றியும் விளக்கம் கொடுத்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக லியோ சக்சஸ் மீட்டில் விஜய் குட்டி ஸ்டோரி சொல்லி மாஸ் காட்டினார். இந்த இரண்டுக்கும் சேர்த்து வைத்து பஞ்ச் கொடுத்துள்ளார் லெஜெண்ட் சரவணன்.

அவரது இந்த பேச்சு ரஜினி, விஜய் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது. அதேபோல், ப்ளூ சட்டை மாறனும் லெஜெண்ட் சரவணின் பேச்சை வைத்து ரஜினியை ட்ரோல் செய்துள்ளார். ”தலீவரை கலாய்த்து தள்ளிய லெஜண்ட்” என ஒரே ட்வீட்டில் ரஜினியை பங்கம் செய்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X