10 நாளில் தி லெஜண்ட் படத்தின் வசூல் சாதனை.. விவரத்தை தெரிஞ்சுக்கலாமா!
சென்னை : கடந்த மாதம் 28ம் தேதி லெஜண்ட் சரவணன் நடிப்பில் வெளியானது தி லெஜண்ட் படம்.
இந்தப் படம் சர்வதேச அளவில் அதிகமான திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டது. காலைக் காட்சிகளும் வெளியாகின.
இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் கடந்த 10 நாட்கள் சிறப்பான வசூலை படம் பெற்றுள்ளது.

நடிகர் லெஜண்ட் சரவணன்
நடிகர் லெஜண்ட் சரவணன் ஆரம்பத்தில் விளம்பரப் படங்களில் நடித்து அதன்மூலம் பல விமர்சனங்களை பெற்றவர். அவற்றில் பெரும்பாலும் நெகட்டிவ் விமர்சனங்களை அவர் சந்தித்த போதிலும் தற்போது தி லெஜண்ட் படம் மூலம் சினிமாவிலும் கால் பதித்துள்ளார். கடந்த 28ம் தேதி தி லெஜண்ட் படம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் வெளியானது.

பிரம்மாண்ட படம்
இந்தப் படம் மிகவும் பிரம்மாண்டமான அளவில் வெளியான நிலையில், இந்தப் படமும் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளன. ரஜினி, கமல் போன்றவர்கள், வயதான பின்பும் தற்போது வரை படங்களில் நடித்து வருகின்றனர். ஆனால் 50 வயதான லெஜண்ட் சரவணன் தன்னுடைய முதல் படத்தில் நடித்து சாதித்துள்ளார்.

ஊர்வசி ராவ்டேலாவுடன் இணைந்த லெஜண்ட்
இதேபோல முதல் படத்திலேயே உலக அழகியுடன் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் லெஜண்ட் சரவணன். பாலிவுட்டில் சிறப்பாக நடித்துவரும் ஊர்வசி ராவ்டேலா லெஜண்ட் சரவணனுடன் இணைந்து நடித்துள்ளார். இதற்காக இவருக்கு 20 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.

2500 திரையரங்குகள்
ஒரு அறிமுக நடிகருக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறை. சர்வதேச அளவில் இந்தப் படம் 2500 திரையரங்குகளில் வெளியான நிலையில், தமிழகத்தில் மட்டுமே 1000 திரையரங்குகளில் வெளியானது. வெளியான முதல் நாளிலேயே 2 கோடி ரூபாய் வசூலையும் ஈட்டியது.

ரூ.10 கோடியை தாண்டிய வசூல்
இதனிடையே படம் வெளியான கடந்த 10 நாட்களில் இந்தப் படம் 10.2 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளதாக தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன. தன்னுடைய முதல் படத்திலேயே வசூல் சாதனை புரிந்துள்ள லெஜண்ட் சரவணன் அடுத்தடுத்த படங்களை திட்டமிட்டு வருகிறார்.


Click it and Unblock the Notifications











