தலைவன் களம் இறங்கிட்டான்..நெட்டிசன்கள் விமர்சனத்துடன் வெளியானது லெஜண்ட் அண்ணாச்சியின் ஃபர்ஸ்ட் லுக்!

சென்னை : தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் நடிக்கும் திரைப்படத்தில் பஃர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது.

Recommended Video

நடிகை Urvasi -ன் வைர முக கவசம் | Diamond Face-Mask | Urvasi Rautela

அந்த மோஷன் போஸ்டரில் அண்ணாச்சி, ஹாலிவுட் ஹீரோவுக்கே சவால் விடும் வகையில் சும்மா மாஸா நிற்கிறார்

இப்படத்தை சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரப் படங்களை இயக்கிய இரட்டை இயக்குனர்களான ஜேடி-ஜெர்ரி இயக்குகின்றனர்.

 ஜவுளி சாம்ராஜ்ஜியம்

ஜவுளி சாம்ராஜ்ஜியம்

தமிழகத்தில் மிகப்பெரிய ஜவுளி சாம்ராஜ்ஜியம் நடத்தி வருபவர் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி அருள்சரவணன். தனது கடைகளின் விளம்பரத்திற்கு அவரே மாடலாக நடித்து வந்த நிலையில். தன்னை அடுத்த கட்டத்துக்கு உயர்த்தும் முயற்சியாக ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். ஹேரிஸ் ஜெயராஜ் இசையமைக்க பாடலுக்கு வைரமுத்து, ஒளிப்பதிவு வேல்ராஜ் என முன்னணி கலைஞர்களை அண்ணாச்சி ஒப்பந்தம் செய்தார்.

ஊர்வசி ரௌடலா

ஊர்வசி ரௌடலா

சரவண அருளுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌடலா என்பவர் நடித்து வருகிறார்.பல கோடி ரூபாய் செலவில் உருவாகி வரும் இந்த படத்திற்கு பிரம்மாண்டமாக செட் போடப்பட்டு டூயட் பாடல் பாடமாக்கப்பட்டது. இந்த புகைப்படங்கள் கடந்தாண்டு வெளியாகி பெரும் வரவேற்றை பெற்றது.

5 மொழிகளில்

5 மொழிகளில்

இந்த பாடத்தில் சரவணன்அருள் விஞ்ஞானியாக நடித்துள்ளாராம். இத்திரைப்படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும், அண்ணாச்சி நடிக்கும் முதல் திரைப்படமே பான் இந்திய திரைப்படமாக வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

ஹாலிவுட் ஹீரோவுக்கே சவால்

ஹாலிவுட் ஹீரோவுக்கே சவால்

தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் அருள் நடிக்கும் படத்திற்கு " தி லெஜண்ட்" என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சற்று முன் வெளியாகி உள்ள அந்த மோஷன்போஸ்டரில் அண்ணாச்சி ஹாலிவுட் ஹீரோவுக்கே சவால் விடும்வகையில் சும்மா மாஸா நிற்கிறார். இந்த படத்தில் அருள் சரவணன் விஞ்ஞானியாக நடிப்பதால், ஆராய்ச்சி மையம், கண்ணாடி குடுவைகள் என மோஷன் போஸ்டர் மெர்சலாக உள்ளது. மோஷன் போஸ்டரில் பைனல் டச்சாக கையில் எதோ ஒரு ஆயுதத்தை வைத்துக்கொண்டு டேரராக நிற்கிறார் நம்ம அண்ணாச்சி.

கலாய்க்கும் நெட்டிசன்ஸ்

கலாய்க்கும் நெட்டிசன்ஸ்

இந்த மோஷன் போஸ்டரை பார்த்த நெட்டிசன்ஸ் தலைவன் களம் இறங்கிட்டான் இனி கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என இவர் தான் மாஸ் என ட்ரோல் செய்து வருகின்றனர். ஆனால், உண்மையை சொல்லப்போனால் மோஷன் போஸ்டர் செம கெத்தாகத்தான் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X