படப்பிடிப்பை தொடங்கிய சரவணா ஸ்டோர் அண்ணாச்சி.. ஆக்ஷன் பிளாக் போல.. தீயாய் பரவும் போட்டோஸ்!

சென்னை: லெஜன்ட் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி சரவணன் அருள் நடிக்கும் படத்தில் ஷுட்டிங் ஸ்பாட் போட்டோக்கள் வைரலாகி வருகிறது.

Recommended Video

Legend Saravanan Movie FIGHT SCENE MAKING | Prabhu, Robo Shankar

தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருளை தெரியாதவர்கள் இருக்க முடியாது.

அவரது கடையின் விளம்பரத்தில் இளம் நடிகைகள் முதல் வெளிநாட்டு அழகிகள் வரை அழைத்து வந்து ஆடி வந்த அவர், தற்போது சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார்.

ஜேடி ஜெரி இயக்கம்

ஜேடி ஜெரி இயக்கம்

சரவணன் அருளின் தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரப் படங்களை எடுத்தும் வரும் இயக்குநர்கள் ஜே.டி மற்றும் ஜெரி ஆகியோரே அவர் நடிக்கும் வெள்ளித்திரை படத்தையும் இயக்கி வருகின்றனர். இவர்கள் ஏற்கனவே உல்லாசம், விக்ரமாதித்யா, விசில் உள்ளிட்ட படங்களை இயக்கி இருக்கிறார்கள்.

லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு

லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு

இப்படத்தின் அறிவிப்பு கடந்த 2019ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக வெளியானது. அப்போதே படப்பிடிப்பும் தொடங்கிய நிலையில் கொரோனா அச்சுறுத்தல் மற்றும் லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு தள்ளிப்போனது.

ஆக்ஷன் காட்சிகள்

ஆக்ஷன் காட்சிகள்

தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால் அண்ணாச்சி நடிக்கும் படத்தின் ஷுட்டிங் மீண்டும் தொடங்கியுள்ளது. அருள் நடிக்கும் இப்படத்தின் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. இதில் நடிகர் ரோபோ ஷங்கரை ரவுடிகள் சிலர் அடிக்க, அவர்களை தடுப்பதுடன், அவர்களை அடித்து தும்சம் செய்கிறார் அருள்.

ரூ. 30 கோடி பட்ஜெட்

ரூ. 30 கோடி பட்ஜெட்

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. கடந்த ஆண்டு இப்படத்தின் பாடல் காட்சிகள் ஏவிஎம் ஸ்டூடியோவில் பிரம்மாண்ட செட் போட்டு எடுக்கப்பட்டது. இப்படத்தின் பட்ஜெட் 30 கோடி என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஆக்ஷன் பிளாக்?

ஆக்ஷன் பிளாக்?

இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். சரவணன் அருள் நடிக்கும் படத்தின் போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள், படம் பக்கா ஆக்ஷன் பிளாக்காக இருக்கும் போலயே என்று கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Read more about: legend saravana store
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X