அண்ணாத்த ரஜினியை சந்தித்த லெஜன்ட் சரவணன் அருள்.. இணையத்தை தெறிக்கவிடும் போட்டோஸ்!
சென்னை: லெஜன்ட் சரவணன் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினியை சந்தித்த போட்டோ வைரலாகி வருகிறது.
லெஜன்ட் சரவணா ஸ்டோர் சரவணன் அருள் தற்போது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பிரபல பாலிவுட் நடிகையான ஊர்வசி ரவுட்டேலா சரவணனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
இப்படத்தை இயக்குநர்கள் ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்குகின்றனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

சண்டைக்காட்சிகள்
இப்படத்தில் ரோபோ ஷங்கர் உட்பட பலரும் நடிக்கின்றனர். இப்படத்தின் சண்டைக்காட்சிகளின் புகைப்படங்கள் அண்மையில் வெளியாகி பெரும் வைரலானது. இதனை பார்த்த ரசிகர்கள் செம ஆக்ஷன் பிளாக் போல என கருத்து தெரிவித்து வந்தனர்.

மணாலியில் டூயட்
இந்நிலையில் இப்படத்தின் பாடல் காட்சிகளை குலு மணாலியில் காட்சியாக்கப்பட்டது. சரவணன் அருள் ஊர்வசி ரவுட்டேலாவுடன் டூயட் பாடும் அந்த போட்டோக்களும் சமூக வலைதளங்களில் பெரும் வைரலானது.

ரஜினியுடன் சந்திப்பு
இந்நிலையில் லெஜன்ட் சரவணன் அருளின் மேலும் ஒரு போட்டோ இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறது. அதாவது லெஜன்ட் சரவணன், நடிகர் ரஜினிகாந்தை ஷூட்டிங் ஸ்பாட்டில் சந்தித்துள்ளார்.

அண்ணாத்த படப்பிடிப்பு
லெஜன்ட் சரவணன் ரஜினிகாந்தை சந்தித்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் மீட்
இருவரின் படப்பிடிப்பும் ஒரே இடத்தில் நடைபெற்று வருவதாக தெரிகிறது. அப்போது இருவரும் சந்தித்துள்ளனர். இருவரின் சந்திப்பின் போது எடுக்கப்பட்ட போட்டோதான் இது.

ஏன் மாஸ்க் போடல?
இதில் நடிகர் ரஜினிகாந்த் மாஸ்க் அணிந்துள்ளார். ஆனால் லெஜன்ட் சரவணன் மாஸ்க் அணியவில்லை. இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், லெஜன்ட் சரவணன் ஏன் மாஸ்க் அணியவில்லை என கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











