சரவணா ஸ்டோர்ஸ் ஓனர் படத்துக்கு பூஜை போட்டாச்சு.. ஹீரோயின் யார் தெரியுமா?

Recommended Video

Legend Saravana stores owner movie started with pooja

சென்னை: சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் அருள் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்தின் தொடக்க விழா இன்று காலை ஏவிஎம் ஸ்டுடியோவில் பூஜையுடன் ஆரம்பமானது.

சரவணா ஸ்டோர்ஸ் ஓனர் சரவணனை பெஸ்ட்டு பெஸ்ட்டு என விளம்பரப் படங்களில் ஆட வைத்த விளம்பரப் பட இயக்குநர்கள் ஜேடி - ஜெர்ரி இணைந்து இந்த படத்தை இயக்குகின்றனர்.

இந்த படத்தில் சரவணனுக்கு ஜோடியாக, கீத்திகா திவாரி எனும் மாடல் அழகி நாயகியாக அறிமுகமாகிறார்.

ஆடம்பரம் இல்லாமல்

ஆடம்பரம் இல்லாமல்

சென்னையில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் எந்த ஒரு ஆடம்பரமும் ஆர்ப்பாட்டமும் இன்றி சரவணா ஸ்டோர்ஸ் ஓனர் படத்தின் பூஜை எளிமையான முறையில் நடைபெற்றது.

ஹாரிஷ் ஜெயராஜ்

ஹாரிஷ் ஜெயராஜ்

சரவணா ஸ்டோர்ஸ் ஓனர் சரவணன் நடிக்கும் இந்த புதிய படத்திற்கு தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

ஹீரோயின் யார்?

ஹீரோயின் யார்?

இந்த படத்தில் நாயகிகளாக நடிக்க வைக்க நயன்தாரா, தமன்னா உள்ளிட்ட முன்னணி ஹீரோயின்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல்கள் பரவின. இந்நிலையில், சரவணனுக்கு ஜோடியாக, கீத்திகா திவாரி எனும் மாடல் நாயகியாக அறிமுகமாகிறார்.

பட பூஜை

பட பூஜை

சென்னையில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் எந்த ஒரு ஆடம்பரமும் ஆர்ப்பாட்டமும் இன்றி சரவணா ஸ்டோர்ஸ் ஓனர் படத்தின் பூஜை எளிமையான முறையில் நடைபெற்றது. இந்த பட பூஜையில் பிரபல இயக்குநர் எஸ்.பி முத்துராமன் கலந்து கொண்டு வாழ்த்தினார். பிரபு மற்றும் விவேக் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.

டாப் டெக்னீஷியன்

டாப் டெக்னீஷியன்

சரவணா ஸ்டோர்ஸ் ஓனரின் இந்த அறிமுக படம் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை உல்லாசம்/விசில் படங்களை இயக்கிய ஜே.டி. ஜெர்ரி இணைந்து இயக்குகின்றனர். ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, ரூபன் எடிட்டிங் பணியை மேற்கொள்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X