பாலிவுட் ஹீரோயினுடன் மணாலியில் ரொமான்ஸ் பண்ணும் லெஜண்ட் சரவணா.. பரபரக்கும் படப்பிடிப்பு!

சென்னை: இரட்டை இயக்குநர்கள் ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் லெஜண்ட் சரவணா நடிக்கும் பிரம்மாண்ட படத்தின் பிரத்யேக புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

சமீபத்தில் பாலிவுட் ஹீரோயின் ஊர்வசி ரவுத்தேலா சரவணன் அருளுக்கு ஜோடியாக இந்த படத்தில் நடிக்கிறார் என்கிற தகவல் வெளியாகின.

இந்நிலையில், ஊர்வசி ரவுத்தேலா உடன் மணாலியில் படப்பிடிப்பை ஆரம்பித்துள்ள அட்டகாசமான போட்டோஸ் வைரலாகி வருகிறது.

ஹீரோவாக

ஹீரோவாக

லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரான சரவணன் அருள், தனது கடை விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஹன்சிகா, தமன்னா என ஜோடி போட்டு நடித்து அசத்திய இவர், தற்போது இயக்குநர் ஜேடி ஜெர்ரி இயக்கும் பிரம்மாண்ட படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

ஆரம்பம்

ஆரம்பம்

கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் லெஜண்ட் சரவணா நடிக்கும் அறிமுக படத்தின் பூஜை பிரம்மாண்டமாக போடப்பட்டது. விசில், உல்லாசம் உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபல விளம்பர பட இயக்குநர்கள் ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்கத்தில் சரவணன் அருள் ஹீரோவாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார்.

மாறிய ஹீரோயின்

மாறிய ஹீரோயின்

கோலிவுட்டில் பிரபல நடிகைகளிடம் நடத்திய பேச்சுவார்த்தை சரியாக அமையாத காரணத்தால் கீதிகா திவாரி எனும் மாடலை ஹீரோயினாக களமிறக்கினர். பட பூஜையிலும் அவர் கலந்து கொண்டார். ஆனால், லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு தாமதமான நிலையில், தற்போது கீதிகா திவாரிக்கு பதிலாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா ஒப்பந்தமாகி உள்ளார்.

மணாலியில் படப்பிடிப்பு

மணாலியில் படப்பிடிப்பு

நடிகர்கள் பிரபு, நாசர், விவேக், கோவை சரளா மற்றும் காளி வெங்கட் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் இணைந்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது மணாலியில் ஆரம்பமாகி உள்ளது. சமீபத்தில் லெஜண்ட் சரவணா கலந்து கொண்ட அதிரடியாக ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், தற்போது நாயகி ஊர்வசி ரவுத்தேலா உடன் டூயட் பாட மணாலிக்கு படக்குழு பறந்துள்ளனர்.

சயின்ஸ் ஃபிக்‌ஷன்

சயின்ஸ் ஃபிக்‌ஷன்

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் என இந்த படத்தை சுமார் 200 கோடி செலவில் பிரம்மாண்டமாக உருவாக்க திட்டமிட்டுள்ளனர் இயக்குநர்கள் ஜேடி ஜெர்ரி. இந்த படத்தில் நாயகி ஊர்வசி ரவுத்தேலா மைக்ரோ பயாலஜிஸ்ட் மாணவியாக நடிப்பதாகவும், சயின்ஸ் ஃபிக்‌ஷன் திரைப்படமாக இந்த படம் உருவாக உள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

பாலிவுட் ஹீரோயினுக்கே போட்டியாக

பாலிவுட் ஹீரோயினுக்கே போட்டியாக

பளிங்கு சிலை போல மின்னும் பாலிவுட் ஹீரோயின் ஊர்வசி ரவுத்தேலாவுக்கே செம டஃப் கொடுக்கும் அளவுக்கு செம ஃபிட்டாகவும் ஸ்மார்ட்டாகவும் அழகாகவும் மாறியுள்ளார் லெஜண்ட் சரவணா. மணாலியில் படப்பிடிப்பு ஆரம்பமாகி உள்ள நிலையில், ஹீரோ லெஜண்ட் சரவணா மற்றும் நாயகி ஊர்வசி ரவுத்தேலா இருவரும் இணைந்திருக்கும் ஏகப்பட்ட போட்டோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X