Legend Saravanan: மாஸ் லுக்கில் லெஜண்ட் சரவணன்... கூலர்ஸ், எம்ஜிஆர் போஸ்... வேற மாதிரி வேற மாதிரி!
சென்னை: சரவணா ஸ்டோர்ஸ் புகழ் அண்ணாச்சி தி லெஜண்ட் திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
ஜேடி-ஜெர்ரி இயக்கிய 'தி லெஜண்ட்' திரைப்படம் திரையரங்குகளைத் தொடர்ந்து தற்போது ஹாட்ஸ்டார் ஓடிடியில் ஸ்ட்ரீமாகி வருகிறது
இந்தப் படத்திற்கு எதிர்பார்த்த அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் அண்ணாச்சி.
இந்நிலையில், தற்போது கூலர்ஸ், மஞ்சள் நிற கோட், சூட் என எம்ஜிஆர் லுக்கில் போட்டோ ஷூட் நடத்தி அசத்தியுள்ளார்.

அண்ணாச்சியின் மிரட்டல் லுக்
சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் மூலம் மக்களிடம் பிரபலமானவர் லெஜெண்ட் அண்ணாச்சி. தனது கடை விளம்பரங்களில் ஆட்டம் போட்ட லெஜண்ட் சரவணன் அண்ணாச்சி, அவரே சொந்தமாக தயாரித்த தி லெஜண்ட் படம் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமானார். கடந்தாண்டு ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம், எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்நிலையில், லெஜண்ட் சரவணன் தனது புது லுக்கில் எடுத்துக்கொண்ட மிரட்டலான போட்டோ ஷூட்டை டிவிட்டரில் ஷேர் செய்துள்ளார்.

புது கூலர்ஸ், லேசா கொஞ்சம் தாடி
மஞ்சள் நிற கோர்ட், சூட், அதற்கு மேட்சிங்காக கறுப்பு சட்டை, கூலர்ஸ் என செம்ம ஸ்மார்ட்டாக போட்டோ ஷூட் நடத்தியுள்ளார் லெஜண்ட் சரவணன். முக்கியமாக ஆசை படத்தில் வரும் அஜித்தைப் போல, மெல்லிதாக தாடி வைத்து க்யூட்டாக எம்ஜிஆர் போஸ் கொடுத்துள்ளார். நாடியில் கை வைத்து, வானத்தை பார்த்தது மாதிரி, ரஜினியின் ஃபேவரைட் லுக் என நான்கு விதமான போட்டோஸ் வெளியிட்டு கெத்து காட்டியுள்ளார். லெஜண்ட் சரவணன் அண்ணாச்சியின் இந்த போட்டோஸ் இணையத்தையே தெறிக்கவிட்டுள்ளது.

அடுத்த பட அறிவிப்பு?
மேலும், இந்த டிவிட்டர் போஸ்ட்டில் "New Transition... Details Soon..." என்ற கேப்ஷனுடன் தனது அடுத்த படத்திற்கான லீட் கொடுத்துள்ளார் அண்ணாச்சி. சமீபத்தில் காஷ்மீர் சென்றிருந்த அவர், லியோ படத்தில் விஜய்யுடன் நடிப்பதாக செய்திகள் வெளியாகின. அதனால் தான் காஷ்மீர் சென்றுள்ளதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், அதுகுறித்து லியோ படக்குழுவினர் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. இந்நிலையில் தற்போது அவரே தனது டிவிட்டரில் புதிய லுக்குடன் விரைவில் அறிவிப்பு என பதிவிட்டுள்ளார்.

ஓடிடியில் கலக்கும் லெஜண்ட் சரவணன்
தி லெஜண்ட் திரைப்படம் திரையரங்குகளைத் தொடர்ந்து தற்போது ஹாட்ஸ்டார் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. பல மாதங்களாக ஓடிடியில் வெளியாகாமல் இருந்த இந்தப் படம், கடந்த 3ம் தேதி முதல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. தி லெஜெண்ட் ஓடிடி ஸ்ட்ரீமிங்கில் நம்பர் 1 இடத்தில் உள்ளதாக அண்ணாச்சி சில தினங்களுக்கு முன்பு ட்வீட் செய்திருந்தார். இது கொடுத்த நம்பிக்கையில் அண்ணாச்சி தனது அடுத்த படத்திற்கு ரெடியாகிவிட்டதாக நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

ரசிகர்கள் கொண்டாட்டம்
லெஜண்ட் சரவணன் ஹீரோவாக நடித்த தி லெஜெண்ட் திரைப்படத்தை ஜேடி - ஜெர்ரி இயக்கியிருந்தனர். லெஜெண்ட் அண்ணாச்சியுடன் ஊர்வசி ரவுத்தேலா, பிரபு, விவேக், விஜயக்குமார் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர், ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். இந்நிலையில் ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருது வென்ற பரபரப்புக்கு நடுவிலும், லெஜெண்ட் அண்ணாச்சியின் புதிய லுக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











