இந்த பக்கம் 5 ஹீரோயின்கள்.. அந்த பக்கம் 5 ஹீரோயின்கள்.. நடுவுல லெஜண்ட் சரவணன்.. மாஸா நடந்த இசைவிழா!

சென்னை : லெஜண்ட் சரவணன் நாயகனாக நடித்து வரும் 'தி லெஜண்ட்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பத்து 10 ஹீரோயின்களுக்கு நடுவில் மாஸாக இருந்தார் லெஜண்ட் சரவணன் அருள்.லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் லெஜண்ட் சரவணன் நாயகனாக நடித்து வரும் 'தி லெஜண்ட்' விரைவில் வெளியாகவுள்ளது.

Recommended Video

கெத்தா என்ட்ரி குடுத்த Legend | Legend Audio Launch | Legend Saravanan Mass Entry #Kollywood

ஹாரிஸ் ஜெயராஜ் தி லெஜண்ட் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்திலிருந்து வெளியாகியுள்ள 2 பாடல்கள் மெகா ஹிட்டாகியுள்ளன.

தி லெஜண்ட் டிரைலர்

தி லெஜண்ட் டிரைலர்

தி லெஜண்ட்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியிட்டு விழா நேற்று மாலை 6 மணிக்கு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த படத்தின் தமிழ் டிரைலரை பிரபு வெளியிட்டார். டிரைலரில், பிரம்மாண்டமாக உலகமே ஆச்சர்யப்படுகிற பெரிய சைன்டிஸ்ட் நீங்க... என்று தொடங்குகிறது. இதன்மூலம் 'தி லெஜண்ட்' விஞ்ஞானி கதாநாயகனாக இந்த படத்தில் நடித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

பிரம்மாண்ட விழா

பிரம்மாண்ட விழா

ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள நிலையில் பாடல் வெளியீடும் அதற்கேற்ப பான் இந்திய நாயகிகளை அழைத்து பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில், பூஜா ஹெக்டே, தமன்னா, ஹன்சிகா, ராய் லட்சுமி, ஷ்ரதா ஸ்ரீநாத், யாஷிகா ஆனந்த், டிம்பிள் ஹயாதி, ஸ்ரீ லீலா, நுபுர் சனான், ஊர்வசி ரௌதாலா உள்ளிட்ட நாயகிகள் கலந்து கொண்டனர்.

இது ஆரம்பம் தான்

இது ஆரம்பம் தான்

10 நாயகிகளுக்கு நடுவில் செம மாஸாக போஸ் கொடுத்த லெஜண்ட் சரவணன் நடிகைகள் கேட்ட கேள்விக்கு கெத்தாக பதிலளித்தார். அதில் தமன்னா, ஒரு குடும்ப விழாவுக்கு வந்த மாதிரி மிகவும் கலர்புல்லா இருக்கு. அதே போல தி லெஜண்ட் திரைப்படமும் செமையா, இருக்கும்னு நினைக்கிறேன். இந்த படத்தை பார்க்க மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். சரவணன் சார் இது ஒரு ஆரம்பம் தான் இன்னும் நிறைய படங்களில் நீங்கள் நடிக்க வேண்டும் என்றார் தமன்னா.

எப்போதும் சோலோதான்

எப்போதும் சோலோதான்

இதையடுத்து, நடிகை ஹன்சிகா மோத்வானி, வருங்காலத்தில் எந்த நடிகருடன் சேர்ந்து படம் பண்ணுவீங்க என்று கேட்டதற்கு, எந்த ஹீரோ கூடனும் நான் இணைந்து படம் நடிக்க மாட்டேன். நான் எப்போதுமே சோலோ தான் என மாஸாக பதிலளித்தார். ஆனால், எனக்கு மிகவும் பிடித்த நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று சரவணன் கூறினார்.

விமர்சிப்பவர்களுக்கு வாழ்த்துக்கள்

விமர்சிப்பவர்களுக்கு வாழ்த்துக்கள்

இதையடுத்து, யாஷிகா ஆனந்த், சோஷியல் மீடியாவில் உங்களை பற்றியும், உங்கள் படத்தை பற்றியும் வரும் விமர்சனங்கள் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க என்று கேட்டார். அவர்கள் அனைவருக்குமே என்னுடைய வாழ்த்துக்கள் என்று ஒரு சூப்பரான ரிப்ளை கொடுத்து இருந்தார் சரவணன் அருள். இப்படி அனைத்து நடிகைகள் கேட்ட கேள்விக்கும் தரமான பதில் கொடுத்திருந்தார் சரவணன்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X