Legend Saravanan - அவர் உருவம் பாரு எளிமை.. ஆட்டோ தொழிலாளர்களுடன் விஜயதசமி கொண்டாடிய லெஜண்ட் சரவணன்
சென்னை: Legend Saravanan (லெஜண்ட் சரவணன்) நடிகரும் தொழிலதிபருமான லெஜண்ட் சரவணன் ஆட்டோ தொழிலாளர்களுடன் விஜயதசமி கொண்டாடிய புகைப்படம் ட்ரெண்டாகியுள்ளது.
துணிக்கடைகளில் மிகப்பெரிய சாம்ராஜ்யம் செலுத்துவது தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ். தற்போது அதன் உரிமையாளராக லெஜண்ட் அருள் சரவணன் இருக்கிறார். தனது கடையை விளம்பரப்படுத்தும் நோக்கத்தில் ஆரம்பத்தில் விளம்பர படங்களில் தோன்றினார். அவருடன் ஹன்சிகா, தமன்னா உள்ளிட்ட முன்னணி நடிகைகளும் நடித்தனர்.

தி லெஜண்ட்: இதனையடுத்து தி லெஜண்ட் என்ற திரைப்படத்தில் நடித்தார் லெஜண்ட் அருள் சரவணன். இந்தப் படத்தை இரட்டை இயக்குநர்களான ஜேடி - ஜெர்ரி இயக்கியிருந்தனர். கடந்த ஆண்டு வெளியான இந்தப் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். விவேக், பிரபு, நாசர் உள்ளிட்டோரும் படத்தில் நடித்திருந்தனர். படம் ரசிகர்களிடம் போதிய வரவேற்பைப் பெறவில்லை.
ட்ரோல் செய்த நெட்டிசன்ஸ்: படத்துக்கு தோல்வியை கொடுத்த ரசிகர்கள் அருள் சரவணனையும் கடுமையாக ட்ரோல் செய்தனர். அவரது படத்தில் நடித்திருக்கும் காட்சிகளை பகிர்ந்தும் கிண்டல் செய்துவந்தனர். அதேசமயம் நடிப்பதற்கு யார் வேண்டுமானாலும் உரிமை இருக்கிறது. லெஜண்ட் அண்ணாச்சி விஷயத்தில் நெட்டிசன்கள் கொஞ்சம் ஓவராகவே போகின்றனர் என ஒரு தரப்பினர் தங்களது கண்டனத்தையும் பதிவு செய்தனர்.

அடுத்த படம்: லியோ படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் நடந்துகொண்டிருந்தபோது லெஜண்ட் சரவணனும் காஷ்மீரில் புதிய லுக்கோடு புகைப்படத்தை வெளியிட்டார். அதனையடுத்து அதுதான் சரவணனின் அடுத்த படத்துக்கான லுக் என்று கூறப்பட்டது. இருந்தாலும் சரவணன் தரப்பிலிருந்து தன்னுடைய அடுத்த படம் குறித்த எந்த அப்டேட்டும் இதுவரை வெளியாகாமல் இருக்கிறது.

விஜயதசமி: இந்நிலையில் இன்று விஜயதசமி கொண்டாடும் சூழலில் லெஜண்ட் சரவணன் ஆட்டோ தொழிலாளர்களுடன் விஜயதசமி பண்டிகையை கொண்டாடினார். அதுதொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகி ட்ரெண்டாகியுள்ளது. மேலும் அந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லெஜண்ட் அண்ணாச்சி சரவணன் எவ்வளவு எளிமையாக இருக்கிறார் என கமெண்ட்ஸ் செய்தும்வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











