லீடர் படத்தை பார்த்து தனுஷ் - வெற்றி மாறன் கொடுத்த ரியாக்‌ஷன்.. லெஜண்ட் சரவணன் பளிச்

சென்னை: இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் லீடர். வரும் ஏப்ரல் 3ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் மார்ச் 29ஆம் தேதி நடைபெற்றது. இதில் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நாயகன் லெஜண்ட் சரவணன் பேசும்போது படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அவர் பேசுகையில், " படத்தின் கதையை பொறுத்தவரை அப்பாவி அப்பா - மகள் இருக்கிறார்கள், திடீரென அவர்களின் வாழ்க்கையில் ஒரு கேங்ஸ்டர் வருகிறார். அதன் பின்னர் என்ன ஆனது என்ற கதையை, மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் இன்றைய தலைமுறையினர் தொடங்கி அனைவருக்கும் பிடிக்கும் வகையில் படத்தை உருவாக்கி உள்ளார் இயக்குநர் துரை செந்தில்குமார். இந்த படத்தில் அவர் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொண்டார்.

Legend Saravanan Confident Leader Will Be Next Big Hit Like Jailer After Appreciation From Dhanush Vetrimaaran
Photo Credit:

படத்தின் ஃபைனல் எடிட் முடிந்ததும் படத்தை பார்த்தவர் இசையமைப்பாளர் ஜிப்ரான் தான். அவர் படம் பார்த்துவிட்டு சுமார் 30 நிமிடங்கள் துரை செந்தில்குமாருக்கு போன் செய்து பாராட்டியுள்ளார். படத்தில் குத்து பாடல் எதுவும் இல்லை, ஆனால் படத்தின் கதையுடன் நகரும் பாடல்களை அழகாகவும் பின்னணி இசையை மிகவும் அழகாகவும் கொடுத்துள்ளார் ஜிப்ரான்.

ஜார்ஜியாவில் -14 டிகிரியில் நாங்கள் இரண்டு வாரங்கள் வேலை செய்தோம், கடும் உறைபனியில் மொத்த படக்குழுவினரும் சிரமப்பட்டு உருவாக்கிய அந்த காட்சி மிகவும் சிறப்பாக வந்துள்ளது. கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி படமாக்கும் போது எனக்கு அடிபட்டுவிட்டது. நடக்கவே சிரமமாக மாறிவிட்டது. அன்றைய தினம் நடிக்க முடியுமா என்ற கேள்வி கூட எனக்குள் இருந்தது. ஆனால் இயக்குநர் ஆக்‌ஷன் என்று சொன்னதும் எங்கிருந்துதான் எனக்கு அந்த எனர்ஜி வந்ததோ என்று தெரியவில்லை. கடவுளின் ஆசீர்வாதத்தால் அந்த காட்சியை நடித்து முடித்தேன்.

Legend Saravanan Confident Leader Will Be Next Big Hit Like Jailer After Appreciation From Dhanush Vetrimaaran
Photo Credit:

திட்டும் காட்சி: ஒரு காட்சியில் அறந்தாங்கி நிஷா என்னைத் திட்டுவது போன்ற ஒரு காட்சி, ஆனால் அதில் அவர் இயக்குநர் சொன்னதைக் காட்டிலும் அதிகமாக திட்டினார். எனக்கு அதிர்ச்சி ஆகிவிட்டது. அதன் பின்னர் நான் அவர்களைப் பாராட்டினேன்.

வெற்றிமாறன்: படத்தைப் பார்த்த வெற்றிமாறன் சாரும், தனுஷ் சாரும் படம் பிரமாதமாக இருக்கிறது என்றும், பிரமாண்டமாக இருக்கிறது என்றும் பாராட்டி உள்ளனர். அவர்கள் இருவரும் படத்தை பாராட்டிய பின்னர் ஏற்கனவே இருந்த நம்பிக்கை, எனக்கும் எனது படக்குழுவுக்கும் அதிகமாகி உள்ளது. ஜெய்லர் , விக்ரம் மற்றும் லியோ மாதிரி மிகப்பெரிய வெற்றிப் படமாக இது அமையும் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும் அதற்கான தகுதிகள் அனைத்தும் இந்த படத்திற்கு உள்ளது. படத்தை குடும்பத்துடன் வந்து பாருங்கள், படம் உங்களுக்கு 100 சதவீதம் திருப்தி படுத்தும் என்று பேசினார். இவரது இந்த பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X