ஜெயிலர் ஃபீவர்.. ரஜினியை ஓரம் கட்டிய லெஜண்ட் சரவணன்.. ஹுக்கும் பாட்டுக்கு அட்டகாசமாக டான்ஸ்!

சென்னை: ஜெயிலர் திரைப்படத்தில் வரும் ஹுக்கும் பாட்டுக்கு லெஜண்ட் சரவணன் அட்டகாசமாக டான்ஸ் ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படத்தை ரசிகர்கள் திருவிழாப்போல கொண்டாடி வருகின்றனர். படம் வெளியான நாளில் இருந்தே திரையரங்கு ரஜினி ரசிகர்களால் நிரம்பி வழிகிறது.

Legend Saravanan dancing to the song Jailer hukum is a trending video on social media

ஜெயிலர் படம் ஐந்து நாட்களில் ரூ 350 கோடியை நெருங்கி, வசூலில் நன்றாக கல்லாக்கட்டி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்: ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்த் முத்துவேல்பாண்டியன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது மனைவியாக 24 ஆண்டுகளுக்கு பின் ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார். மகனாக வசந்த் ரவி நடித்துள்ளார். இப்படத்தில் இடம் பெற்றுள்ள ஹுக்கும் பாடலில் முழுக்க முழுக்க ரஜினியை புகழும்படி வரிகள் அமைந்திருந்தன. அதுமட்டுமின்றி பாடலின் வரிகளை கேட்ட ரஜினி ரசிகர்கள் இந்த வரிகள் மூலம் விஜய்க்கு ரஜினி எச்சரிக்கை கொடுத்திருக்கிறார் என சோஷியல் மீடியாவில் பல கருத்துக்களை பரப்பி வருகின்றனர்.

கொண்டாடும் ரசிகர்கள்: தியேட்டரில் ஹுக்கும் பாடலை பார்த்த ரசிகர்கள் செம மாஸாக இருப்பதாகவும், அந்த பாடலில் ரஜினி வேறலெவெலில் இருப்பதாகவும் கமண்ட்டுகளை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். கடந்த சில காலங்களாக ரஜினிகாந்த் நடிப்பில் வந்த எந்த படமும் அந்த அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை என்பதால் ரஜினி ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.

Legend Saravanan dancing to the song Jailer hukum is a trending video on social media

ரஜினிக்கே டஃப்: லெஜண்ட் சரவணன் 77வது சுதந்திர தினத்தை கொண்டாடினார். அப்போது, தனது அடுத்தப்படத்திற்கான கதை கிடைத்துவிட்டதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு, படம் வெளியாகும் என்றார். மேலும், குழந்தைகளோடு சேர்ந்து ஹுக்கும் பாடலுக்கு டான்ஸ் ஆடினார். சரவணன் எது செய்தாலும் ட்ரோல் செய்யும் பேன்ஸ் இந்த வீடியோவை வைரலாக்கி, ரஜினியை ஓரம் கட்டிய லெஜண்ட் சரவணன் என்றும் ரஜினிக்கே டஃப் கொடுப்பாரு போல என்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

தி லெஜண்ட்: லெஜண்ட் சரவணன் நடிப்பில் கடந்த ஆண்டு தி லெஜண்ட் வெளியானது. இப்படத்தில் ஹீரோயினாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவ்துலா நடித்திருந்தார். அதுமட்டுமின்றி விஜயகுமார், ரோபோ சங்கர், நாசர், பிரபு, யோகிபாபு, மறைந்த நடிகர் விவேக், மயில்சாமி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தது. கடந்தாண்டு வெளியான இத்திரைப்படம் நல்ல கலெக்ஷனை அள்ளியது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X