பிரபு மகள் ஐஸ்வர்யா- ஆதிக் ரவிச்சந்திரன் திருமணம்.. நேரில் வந்து வாழ்த்திய லெஜண்ட் சரவணன்!

சென்னை: இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும், பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் இன்று திருமணம் நடந்த நிலையில், லெஜண்ட் சரவணன் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சிவாஜியின் மகனான பிரபு, நடிகர் சிவாஜி கணேசன் மற்றும் கமலா தம்பதியினரின் மூன்றாவது மகன் தான் பிரபு. இவர் தனது அப்பாவைப் போலவே 80 மற்றும் 90 காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்டிப்பறந்தார்.

நடிகர் பிரபுக்கு விக்ரம் பிரபு என்ற மகனும், ஐஸ்வர்யா என்ற மகளும் உள்ளனர். இதில் விக்ரம் பிரபு கும்கி படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானார்.

Legend Saravanan greetings director adhik ravichandran and prabhu daughter aishwarya wedding

முதல் திருமணம்: நடிகர் பிரபு தனது மகள் ஐஸ்வர்யாவை சகோதரி தேன்மொழியின் மகன் குணாலுக்கு திருமணம் செய்து வைத்தார். குணால் லண்டனில் சாஃப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வந்த நிலையில், மகள் ஐஸ்வர்யாவும் லண்டனில் செட்டில் ஆனார். ஆனால், திடீரென இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் புரிந்து விட்டனர்.

கேக் கம்பேனி: விவாகரத்துக்கு பின் மீண்டும் சென்னை திரும்பிய பிரபுவின் மகள் ஐஸ்வர்யா மேக் தயாரித்து விற்பனை செய்யும் தொழில் செய்து வந்திருக்கிறார். இவர் மெல்ட்ஸ் டெசர்ட் (meltz.dessertz) என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

ஆதிக் ரவிச்சந்திரன் திருமணம்: இதையடுத்து, ஐஸ்வர்யாவும், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனும் சில காலமாக நெருங்கிய நண்பர்களாக பழகி வந்தனர். அந்த நட்பு காதலாக மாறியதை அடுத்து இருவீட்டாரின் சம்மதத்துடன் இன்று சென்னையில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு நடிகர், நடிகைகள், திரைப் பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

நேரில் வாழ்த்திய லெஜண்ட் சரவணன்: இந்நிலையில், இந்த திருமணத்தில் கலந்து கொண்ட லெஜண்ட் சரவணன் தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில், என்றென்றும் நம் நினைவில் வாழும் நடிகர் திலகம், பத்மஶ்ரீ, பத்ம பூஷன், செவாலியர் டாக்டர் சிவாஜி கணேசன் அவர்களின் இல்லத் திருமண விழாவில் உங்களில் ஒருவனாக நான் கலந்து கொண்டதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

நம் இளைய திலகம் பிரபு அவர்களின் அன்பு மகள் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியதுடன், உங்கள் அனைவரது வாழ்த்துகளையும் ஆசிகளையும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X