மக்களின் அமோக ஆதரவில் ‘தி லெஜண்ட்’.. மகிழ்ச்சியில் அண்ணாச்சி போட்ட ட்வீட்!

சென்னை : ஹாட் ஸ்டாரில் நம்பர் ஒன் இடத்தை 'தி லெஜண்ட்' திரைப்படம் பிடித்துள்ளதால், அண்ணாச்சி மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார்.

தொழிலதிபரான லெஜண்ட் சரவணன், தீபாவளி, பொங்கல் வந்து விட்டால் போதும், விதவிதமாக உடை அணிந்து இளம் நடிகைகளுடன் கடை விளம்பரத்தில் ஆட்டம் போடுவார்.

இதற்கு பல விமர்சனங்கள் எழுந்த போதும், அதை எல்லாம் தட்டித்தூக்கி போட்டு இன்று ஹீரோவாக அவதாரம் எடுத்து அதில் வெற்றியும் கண்டுள்ளார்.

தி லெஜெண்ட்’

தி லெஜெண்ட்’

ஜே.டி மற்றும் ஜெர்ரி இயக்கத்தில் உருவான 'தி லெஜெண்ட்' திரைப்படத்தில் சரவணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடலா, கீத்திகா திவாரி, பிரபு, சுமன், நாசர், விவேக், ரோபோ ஷங்கர், யோகி பாபு, வம்சி கிருஷ்ணா, தம்பி ராமையா, விஜயகுமார் என ஏராளனமான நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

அசத்தலான நடிப்பு

அசத்தலான நடிப்பு

சயின்டிஸ்டான சரவணன் வெளிநாட்டில் படித்துவிட்டு சொந்த ஊருக்கு வருகிறார். அப்போது தனது வீட்டில் வேலை செய்யும் ரோபோ சங்கர் சர்க்கரை நோயால் இறந்துவிட, இந்த நோய்யை ஒட்டுமொத்தமாக அழிக்க குறைந்த விலையில் மருந்து கண்டுபிடிக்கிறார். இதை தெரிந்து கொண்ட, ஒரு கும்பல் இவரை மருந்து தயாரிக்கவிடாமல் தடுக்கிறது .அதை எப்படி எதிர் கொண்டார் என்பது தான் தி லெஜண்ட் திரைப்படத்தின் கதை.

பாடல்கள் ஹிட்

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் பெரும் வரவேற்பை பெற்றன. பான் இந்திய திரைப்படமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில் ஒரே நேரத்தில் திரையரங்கில் இப்படம் வெளியாகி வசூலை வாரிக்குவித்தது.

‘மக்களின் அமோக ஆதரவில்’

‘மக்களின் அமோக ஆதரவில்’

தி லெஜண்ட் திரைப்படம் தியேட்டரில் வெளியாகி கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஆனநிலையில், தி லெஜண்ட் திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகி ஸ்ட்ரீமிங்கில் நம்பர் 1 இடத்தை பிடித்தது. இதனால் மகிழ்ச்சியில் இருக்கும் லெஜண்ட் சரவணன் தனது டுவிட்டர் பக்கத்தில் 'தி லெஜண்ட்' ஆடியோ மற்றும் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்ற வீடியோவை வெளியிட்டு 'மக்களின் அமோக ஆதரவில்' என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X