லெஜண்ட் படத்தை வாங்க போட்டி போடும் முன்னணி நிறுவனங்கள்.. செம சந்தோஷத்தில் அண்ணாச்சி!

சென்னை: தி லெஜண்ட் திரைப்படத்தின் ஒலிபரப்பு உரிமைக்காக முன்னணி சேனல் மற்றும் ஓடிடி நிறுவனத்துடன் ஒப்பந்தம்

விளம்பரங்களில் தோன்றிய லெஜண்ட் சரவணன் படத்தில் நடிக்கிறார் என்றவுடன் பல்வேறு கருத்துகள் முன் வைக்கப்பட்டன.

இந்த படத்தின் வெற்றி, ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் நாயகன் லெஜண்ட் சரவணனையும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.

சேனா ஹிட் கொடுத்த லெஜண்ட்

சேனா ஹிட் கொடுத்த லெஜண்ட்

தி லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் முதன்முறையாக மிகுந்த பொருட்செலவில் மிக பிரமாண்டமான முறையில் பன்மொழி பான் இந்தியா படமாக தயாரித்து, லெஜண்ட் சரவணன் கதாநாயகனாக அறிமுகமான 'தி லெஜண்ட்' திரைப்படம் ஐந்து வாரங்களை கடந்து ரசிகர்களின் பேராதரவுடன் திரையரங்குளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

மக்கள் ஆதரவு

மக்கள் ஆதரவு

விளம்பரங்களில் தோன்றிய லெஜண்ட் சரவணன் படத்தில் நடிக்கிறார் என்றவுடன் பல்வேறு கருத்துகள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டன. ஆனால் அவை அனைத்தையும் மீறிய ஒரு பொழுதுபோக்கு படமாக மட்டும் இல்லமால், சமூக சிந்தனையுடன் கூடிய கதைக்களம் கொண்ட 'தி லெஜண்ட்' படத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டை லெஜண்ட் சரவணன் பெற்றுள்ளார். படத்தின் கதையை மக்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர். லெஜண்ட் சரவணன் முயற்சிக்கு மக்கள் வெளிப்படுத்திய அன்பு தான் இப்படத்தின் வெற்றி என்று கூறியுள்ளார் லெஜண்ட்.

உரிமை பெற போட்டிபோடும் நிறுவனங்கள்

உரிமை பெற போட்டிபோடும் நிறுவனங்கள்

உலகமெங்கிலும் திரையரங்குகளில் சுமார் 45 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில் தற்போது இந்த படத்தின் ஓடிடி வெளியீடு மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பை மக்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கி உள்ளனர். இப்படத்திற்கான சேட்டிலைட் உரிமை மற்றும் ஒடிடி உரிமைக்கான பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவடையும் தருவாயில் உள்ளது. சேட்டிலைட் உரிமை 20 கோடி ரூபாய்க்கும், ஒடிடி உரிமை 25 கோடி ரூபாய்க்கும் விற்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல் படத்திலேயே அசத்தல்

முதல் படத்திலேயே அசத்தல்

சமீபத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்து பல படங்கள் தோல்வி பெற்று வரும் நிலையில், தனது முதல் படத்திலேயே மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார் லெஜண்ட்.'தி லெஜண்ட்' திரைப்படம் வெளியான சமயத்தில் கூறப்பட்ட சில எதிர்மறை விமர்சனங்களை கடந்து மிக பெரிய வெற்றியை திரைப்படம் பெற்றுள்ளது. இந்த வெற்றியால் லெஜண்ட் சரவணன், படக்குழுவினர் மற்றும் அவரது ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். லெஜண்ட் சரவணன் நடிக்கும் அடுத்த படத்திற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் துவங்கப்பட்டுள்ள நிலையில் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X