இத்தனை மொழிகளிலா?... லெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தின் புதிய அப்டேட் !
சென்னை : தமிழ் திரையுலகில் லெஜண்ட் சரவணன் ஹீரோவாக அறிமுகமாகும் படம் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.
உல்லாசம்' படத்தை இயக்கிய ஜே.டி - ஜெரி ஆகிய இரட்டையர்கள் இப்படத்தை இயக்கி வருகின்றனர்.
மாடல் அழகி ஊர்வசி ரவ்துலா, விஜயகுமார், பிரபு, லதா, சச்சு உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் பலரும் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.

தொழிலதிபர்
சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அவரது கடை தொடர்பான விளம்பரங்களில் நடித்து வந்தார். அவரது தோற்றத்தையும், பாவனையையும் நெட்டிசன்கள் சிலர் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்தனர். சிலர் ஆதரவும் தெரிவித்தனர்.

ஹீரோவாக
'லெஜெண்ட்' சரவணன், புதிய படமொன்றில் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகி, படத்திற்கு பூஜையும் போடப்பட்டது. இந்தப்படத்தை ஜேடி-ஜெர்ரி என்ற இரட்டை இயக்குநர்கள் இயக்கி வருகின்றனர். அவரது தயாரிப்பில் அவரே ஹீரோவாக நடிக்கும் திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது.

ஊர்வசி ரவுத்தலா ஹீரோயின்
மாடல் அழகியான ஊர்வசி ரவுத்தலா இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். இவர், 2015-ம்ஆண்டு நடைபெற்ற 'மிஸ் யூனிவர்ஸ்' போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்று வெற்றி வாகை சூடியவர். ஊர்வசி ஏராளமான பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். இப்படத்தில் ஐஐடியில் பணிபுரியும் மைக்ரோபயாலஜிஸ்ட் கதாபாத்திரத்தில் ஊர்வசி ரவுத்தலா நடித்து வருகிறார். அதேபோல, லெஜெண்ட்' சரவணனும் விஞ்ஞானி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சூப்பர் அப்டேட்
இந்நிலையில், இப்படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார் நடிகை ஊர்வசி ரவ்துலா. அதன்படி சென்னையில் நடைபெற்று வந்த இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாக பதிவிட்டுள்ள அவர், படக்குழுவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் இப்படம் 5 மொழிகளில் வெளியாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விறுவிறுப்பான படப்பிடிப்பு
இப்படத்தின் ஆரம்பக்கட்டப் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், கொரோனா நெருக்கடியால் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டது. இடையில் மீண்டும் படப்பிடிப்பு துவங்கியது. கொரோனாவின் இரண்டாம் அலை உச்சத்தில் இருந்ததால், மீண்டும் படப்பிடிப்புகள் ஒத்திவைக்கப்பட்டன. இதையடுத்து தொடங்கிய இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ளது.

கும்பகோணத்தில்
இதையடுத்து இறுதிகட்ட படப்பிடிப்பு கும்பகோணம் அருகே உள்ள பிரசித்திப் பெற்ற கோவில்களில் நடைபெற உள்ளது. குறிப்பாக, திருவிழிமிழலை, திருவிடைமருதூர், உடையார்பாளையம், திருவாடுதுறை ஆகிய ஊர்களில் உள்ள திருக்கோவில்களில் படப்பிடிப்பு நடத்தப்படவிருக்கிறது. இந்த கோவில்களில் திருவிழா நடப்பது போலவும், ஹீரோவுக்கு பரிவட்டம் கட்டுவது போலவும், சாமி பிரகாரத்தை ஹீரோ சுற்றி வருவது போலவுமான காட்சிகள் ஷூட் பண்ணப்படவிருக்கிறது. இதற்காக, கோவில் நிர்வாகத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.

கூட்டம் கூடும்
கோவில்களில் கூட்டம் கூடுவது, சிறப்புப் பூஜைகள் நடத்துவது, சிறப்பு தரிசனம் செய்வதற்கு தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த நேரத்தில் கோவில்களில் சினிமா சூட்டிங் நடத்தினால் தேவையற்ற கூட்டம் கூடுவது கொரோனா பரவலுக்கு காரணமாக அமைந்துவிடுமே என்று கூறுகின்றனர் அப்பகுதி மக்கள்.


Click it and Unblock the Notifications











