Legend Saravanan: அடுத்த அதிரடிக்கு ரெடியான லெஜண்ட் சரவணன்... அண்ணாச்சி ஆட்டம் இனி வேற லெவல்!

சென்னை: சரவணா ஸ்டோர்ஸ் புகழ் அண்ணாச்சி தி லெஜெண்ட் திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

ஜேடி-ஜெர்ரி இயக்கிய 'தி லெஜண்ட்' படம் திரையரங்குகளைத் தொடர்ந்து டிஸ்னி பிளஸ் ஓடிடி தளத்திலும் வெளியானது.

இதனைத் தொடர்ந்து லெஜண்ட் சரவணன் நடிக்கும் புதிய படம் பற்றிய அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற புதிய படத்தின் அப்டேட்டை வெளியிடவுள்ளாராம் லெஜண்ட் சரவணன்.

 Legend Saravanan Next Movie Announcement Is Coming Soon

லெஜண்ட் சரவணனின் புதிய பட அப்டேட்:சரவணா ஸ்டோர்ஸ் மூலம் தமிழ்நாட்டு மக்களிடம் பிரபலமானவர் லெஜண்ட் அண்ணாச்சி. சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களில் ஆட்டம் போட்ட லெஜண்ட் அண்ணாச்சி, தற்போது லெஜண்ட் சரவணன் என்ற பெயரில் ஹீரோவாக மாஸ் காட்டி வருகிறார். சினிமா ஆசையில் அவரே சொந்தமாக படம் தயாரித்து அதில் ஹீரோவாகவும் நடித்திருந்தார்.

அப்படி அண்ணாச்சி நடித்து வெளியான திரைப்படம் தி லெஜண்ட். ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் கடந்த ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. தமிழ் மட்டும் இல்லாமல் பான் இந்தியா படமாகவும் வெளியான தி லெஜெண்ட் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனாலும், அண்ணாச்சிக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது.

தி லெஜண்ட் திரைப்படம் திரையரங்குகளைத் தொடர்ந்து டிஸ்னி பிளஸ் தளத்தில் வெளியாகி ஓடிடி ரசிகர்களிடமும் கவனம் ஈர்த்தது. தி லெஜண்ட் வெளியானதும் விரைவில் அடுத்த படத்தில் அண்ணாச்சி கமிட்டாகவுள்ளதாக சொல்லப்பட்டது. இதில் உச்சபட்சமாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் விஜய்யுடன் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

ஆனால், அதுவெல்லாம் உண்மையில்லை என பின்னர் தெரியவந்தது. இந்நிலையில், தனது அடுத்தப் படத்துக்கான கதை தேர்வில் பிஸியாக இருந்த அண்ணாச்சி, தற்போது ஒரு கதையை ஓக்கே செய்துவிட்டாராம். இந்தப் படத்தின் இயக்குநர், ஹீரோயின் உள்ளிட்ட விவரங்களை விரைவில் வெளியிட உள்ளதாக சொல்லப்படுகிறது. லெஜண்ட் அண்ணாச்சியின் இரண்டாவது படமான இதுவும் பிரம்மாண்டமாக உருவாகும் எனக் கூறப்படுகிறது.

சில வாரங்களுக்கு முன்னர் புதிய லுக்கில் கெத்தான ஒரு வீடியோ வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருந்தார் லெஜண்ட் சரவணன். திருமண நிகழ்ச்சிக்கு தனது ரோல்ஸ் ராய்ஸ் காரில் சென்றிருந்த லெஜண்ட் சரவணன், அங்கு எடுக்கப்பட்ட போட்டோஸ், வீடியோக்களை வெளியிட்டு மாஸ் காட்டியிருந்தார். பிரன்ச் பியர்டு ஸ்டைலில் லேசான தாடி, கோர்ட், சார்ட், டை கட்டியிருந்தது ரசிகர்களுக்கு செம்ம வைப் கொடுத்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X