தனுஷ், சரவணன்.. போனவாரம் பரபரப்பா பேசப்பட்ட ‘அந்த’ விசயம் வெறும் வதந்தி தான்!

லெஜண்ட் சரவணன் ஹீரோவாக நடிப்பதாக வெளியான தகவல் பொய் என்பது உறுதியாகியுள்ளது.

சென்னை: சமூகவலைதளங்களின் வளர்ச்சி மற்றும் ஆதிக்கத்தால், யாரோ எங்கோ பற்ற வைக்கும் சிறு பொறி கூட, காட்டுத்தீ போல பரவி விடுகிறது.

கடந்த வாரம் பெரும் பரபரப்பாக பேசப்பட்ட இரண்டு விசயங்களில் ஒன்று லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் ஓனர் சரவணன் சினிமாவில் ஹீரோவாகிறார் என்பது. மற்றொன்று நாக சைதன்யா, சமந்தா நடிப்பில் ரிலீசாகியுள்ள மஜிலி தெலுங்குப் படத்தை தமிழில் தனுஷ் ரீமேக் செய்கிறார் என்பது.

Legend Saravanan not acting in movies

ஆனால், இந்த இரண்டு செய்திகளுமே உண்மையில்லை என்பது தற்போது தெரிய வந்துள்ளது. ஒவ்வொரு முறை புதிய விளம்பரங்களில் நடிக்கும் போதும் சரவணன் ஹீரோவாகப் போகிறார் என யாரோ ஒருவர் கிளப்பிவிட்டு விடுகிறார் என்பதே சம்பந்தப்பட்டவர்களின் விளக்கம்.

இதே போல், மஜிலி படக் கதையால் கவரப்பட்ட தனுஷ், அதனை தமிழில் ரீமேக் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும், தமிழிலும் சமந்தாவே நாயகி என்றும் ஒரு தகவல் உலா வந்தது. அதுவும் உண்மையில்லை என தற்போது தெரிய வந்துள்ளது.

ஆனால், இந்த இரண்டு செய்திகளுமே உண்மை எனும் அளவிற்கு எல்லா சமூகவலைதளங்களிலும் பரவி விட்டது. சம்பந்தப்பட்டவர்கள் விளக்கம் அளித்த பின்னரே இது பொய்யான தகவல் என்பது தெரிய வந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X