பாக்யராஜ் குடும்பத்திடம் துக்கம் விசாரித்த லெஜண்ட் சரவணன்.. புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

சென்னை: திரைக்கதை மன்னன் கே. பாக்யராஜ் மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், அவரது இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தும் திரைப்பிரபலங்களின் வருகை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தொழிலதிபரும் நடிகருமான லெஜண்ட் சரவணனும், பாக்யராஜ் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது புகைப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கருப்பு நிற உடையில் மிகவும் சோகத்துடன் வந்த லெஜண்ட் சரவணன், முதலில் பாக்யராஜின் புகைப்படத்திற்கு மலர் மாலை அணிவித்தார். பின்னர் சில நிமிடங்கள் கைகளை கூப்பி அமைதியாக அஞ்சலி செலுத்திய அவர், பாக்யராஜின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்தார். அந்த தருணம் அங்கிருந்தவர்களையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

Legend Saravanan Pays Emotional Tribute to K Bhagyaraj Meets Grieving Family at His Chennai Residence

அதன் பின்னர் பாக்யராஜின் மனைவி பூர்ணிமா பாக்யராஜ், மகன் சாந்தனு மற்றும் அவரது மனைவி கீர்த்தி ஆகியோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். குடும்பத்தினருடன் சில நிமிடங்கள் அமர்ந்து பேசிய லெஜண்ட் சரவணன், இந்த துயரத்தை தாங்கிக்கொள்ள மன உறுதியுடன் இருக்க வேண்டும் என்று ஆறுதல் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களாக ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, தனுஷ், சிம்பு, நயன்தாரா - விக்னேஷ் சிவன், சரத்குமார் - ராதிகா, சுந்தர் சி - குஷ்பு உள்ளிட்ட ஏராளமான திரைப்பிரபலங்கள் பாக்யராஜ் இல்லத்திற்கு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்திய நிலையில், தற்போது லெஜண்ட் சரவணனும் தனது மரியாதையை செலுத்தியுள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில், “ இந்தியாவின் தலைசிறந்த திரைக்கதை ஆசிரியர்களில் ஒருவரும், என் மீது பேரன்பும் பாசமும் கொண்டிருந்த திரு. பாக்யராஜ் அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் " என்றும் பதிவிட்டுள்ளார்.

Legend Saravanan Pays Emotional Tribute to K Bhagyaraj Meets Grieving Family at His Chennai Residence

இயக்குநர், நடிகர், எழுத்தாளர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என தமிழ் சினிமாவில் பல துறைகளில் தனது தனித்துவமான முத்திரையை பதித்த கே. பாக்யராஜின் மறைவு, ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினரையும் மீள முடியாத சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு இறுதி மரியாதை செலுத்தும் பிரபலங்களின் புகைப்படங்களும் வீடியோக்களும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X