லெஜண்ட் சரவணன் மாற்று திறமைசாலிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்!
சென்னை: பிரபல தொழிலதிபரும், நடிகருமான லெஜண்ட் சரவணன் நடித்த 'தி லெஜண்ட்' திரைப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது, துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இறுதி கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ்களின் உரிமையாளர் லெஜெண்ட் சரவணன், தீபாவளி, பொங்கல் என பண்டிகை என தனது கடையின் விளம்பரங்களில் தானே நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துடன் பிரபலமும் ஆனார். இந்த விளம்பரத்தில் விதவிதமாக கலர் கலராக அவர் அணிந்து வரும் உடையை பார்ப்பதற்கு என்றே தனி ரசிகர்கள் இருந்தார்கள். அதுவும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளான தமன்னா, ஹன்சிகா மோத்வானியுடன் நடனம் ஆடி அனைவரையும் அசர வைத்தார்.

லெஜண்ட் சரவணன்: இந்த வயதில் எதற்கு இவருக்கு இந்த ஆசை, இதெல்லாம் இவருக்கு தேவையா என பலவிதமான விமர்சனங்கள் வந்தாலும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தன் மனதிற்கு சரி என்று பட்டதை துணிந்து செய்தார் லெஜெண்ட் சரவணன். கடை விளம்பரத்தில் நடித்த லெஜண்ட் சரவணன், ஒரு படி மேலே சென்று தனது சொந்த படத்தை தயாரித்து நடித்திருந்தார். கடந்த 2022-ம் ஆண்டு இயக்குனர்கள் ஜெர்ரி & ஜெடி இயக்கத்தில் 'தி லெஜண்ட்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர். அந்த படத்தில் லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக ஊர்வசி ரவுடேலா நடித்திருந்தார். மேலும், ரோபோ சங்கர், தேவதர்ஷினி, யோகி பாபு, சுமன் ஆகியோர் நடித்திருந்தனர்.
நலத்திட்ட உதவி: 'தி லெஜண்ட்' திரைப்படம் வெளியாகி பல விமர்சனங்கள் வந்த போதும், அதை பற்றி கவலைப்படாமல், அதே துணிச்சலுடன் தனது அடுத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை எதிர்நீச்சல், கொடி, பட்டாசு, கருடன் படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா, சாம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இதில் லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக இருவர் உள்ளம் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை பாயல் ராஜ்புத் நாயகியாக நடித்து வருகிறார். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட இந்த படத்தில், முதற்கட்ட படப்பிடிப்பு தூத்துக்குடியில் போடப்பட்ட நிலையில், இரண்டாம் கட்ட படிப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், மாற்று திறமைசாலிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.


Click it and Unblock the Notifications