அடுத்த படத்திற்கு ரெடி?..அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட லெஜண்ட் சரவணன்!

சென்னை : நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய லெஜண்ட் சரவணன் தனது அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியிட்டுள்ளார்.

Recommended Video

The Legend | களத்தில் இறங்கிய Legend Saravanan,என்ன பண்ணாரு தெரியுமா? *Kollywood

இந்த படத்தில் லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக, ஊர்வசி ரவுத்தலே கோலிவுட் திரையுலகில் நாயகியாக அறிமுகமாகியுள்ளார். மேலும் யோகி பாபு, பிரபு, நாசர், கோவை சரளா, சச்சு, ரோபோ சங்கர், மயில்சாமி, ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

நடிகர் விவேக் நடித்த கடைசி திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. விவேக்கின் காமெடி இந்த படத்தில் தொடர்ந்து பல ரசிகர்களால் ரசிக்க பட்டு வருகிறது.

லெஜண்ட் சரவணன்

லெஜண்ட் சரவணன்

விளம்பர படங்களில், விதவிதமான ஆட்டம் பாடத்தோடு தொலைக்காட்சிகளில் தலைகாட்டிய லெஜண்ட் சரவணன், நடிகராக அவதாரம் எடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இவரது விளம்பரங்களை தொடர்ந்து இயக்கி வந்த இரட்டை இயக்குனர்களான ஜெடி மற்றும் ஜெர்ரி இவர் நடித்த 'தி லெஜெண்ட்' திரைப்படத்தையும் இயக்கினர்.

பான் இந்திய படம்

பான் இந்திய படம்

இத்திரைப்படம் ஜூலை 28 ஆம் தேதி மிகப்பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியானது. சுமார் 2500க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும், தமிழகத்தில் மட்டும் 650 திரையரங்குகளில் வெளியானது. ஒரு முன்னணி நடிகரின் படத்திற்கு இணையாக தமிழ், தெலுங்கு,மலையாளம், இந்தி என 4 மொழிகளில் பான் இந்தியா படமாக தி லெஜண்ட் திரைப்படம் வெளியானது.

வெற்றிகரமாக திரையரங்கில்

வெற்றிகரமாக திரையரங்கில்

இந்த படத்தின் சயின்ட்டிஸ்டாக நடித்திருந்த சரவணன் ஒரு சிறந்த கருத்தை ஒரு நடிகராகவும், தயாரிப்பாளராகவும் கூறி இருந்தார். ஆனால், கதைக்களம் வீக்காக இருந்ததால் அது படத்தின் பின்னடைவுக்கு சற்று காரணமாக அமைந்துவிட்டது என கூறப்பட்டது. இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வந்தாலும், தற்போது வரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருப்பதே, மிக பெரிய வெற்றிதான் என கூறப்படுகிறது.

விரைவில் சந்திக்கிறேன்

விரைவில் சந்திக்கிறேன்

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய லெஜன்ட் சரவணன் வெற்றிக்கு காரணமாக இருந்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். மேலும் விரைவில் ரசிகர்களை சந்திக்கப் போவதாக அறிவித்திருந்தார். அது மட்டுமல்லாமல் தன்னுடைய அடுத்த படம் தி லெஜண்ட் படத்தை காட்டிலும் மிகப் பிரம்மாண்டமாகவும் இன்டர்நேஷனல் லெவலிலும் இருக்கும் என தெரிவித்துள்ளார். அதுமட்டும் இல்லாமல், அருள் சரவணன் தனது ட்விட்டர் பக்கத்தில், ஊடக நண்பர்களுக்கு வணக்கம்...உங்கள் அன்பிற்க்கும் ஆதரவிற்க்கும் மனமார்ந்த நன்றி..விரைவில் சந்திக்கிறேன்... சந்திக்கிறோம் என தெரிவித்து குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X