லியோன்னு மட்டும் சொல்லிடாதீங்க.. காஷ்மீரில் இருந்து அப்டேட் கொடுத்த லெஜண்ட்..கலாய்க்கும் ரசிகர்கள்!
சென்னை: காஷ்மீரில் பக்காவாக பிளான் போட்டு லியோ படத்தின் ஷூட்டிங்கை பனி நிறைந்த நேரத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படமாக்கி வருகிறார்.
நடிகர் விஜய், த்ரிஷா, கெளதம் மேனன் உள்ளிட்ட படக்குழுவினர் காஷ்மீர் படப்பிடிப்பில் பங்கேற்று வருகின்றனர்.
இந்நிலையில், லெஜண்ட் சரவணன் காஷ்மீரில் சுற்றுலா சென்ற போட்டோக்களை பதிவிட்டு தனது அடுத்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என போட்டுள்ள ட்வீட்டுக்கு கீழ் ஏகப்பட்ட ரசிகர்கள் ஜாலியான கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.

லெஜண்ட் சரவணன்
துணிக்கடை, நகைக்கடை என தி நகரில் மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்யத்தை நடத்தி வரும் லெஜண்ட் சரவணன் சினிமாவில் ஹீரோவாக நடிக்கப் போகிறேன் என அறிவித்ததும் ஏகப்பட்ட ட்ரோல்கள் பறந்தன. ஆனால், அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் பெரிய பட்ஜெட்டில் தி லெஜண்ட் படத்தை எடுத்து வெளியிட்டார். பாலிவுட் ஹீரோயின் ஊர்வசி ரவுத்தேலாவையே ஹீரோயினாக தமிழில் அறிமுகம் செய்து பலரையும் வாயடைக்க வைத்தார்.

மணாலியில் ஷூட்டிங்
தி லெஜண்ட் படத்தின் ஷூட்டிங்கை மணாலியில் ஆரம்பித்து குளு குளுவென காட்சிகள் இருக்க வேண்டும் என அதிக செலவு செய்திருந்தார். படம் வெளியான பிறகு அவர் நினைத்த அளவுக்கு படம் பெரிதாக போகவில்லை. தி லெஜண்ட் படத்தின் காட்சிகளை பலரும் ட்ரோல் செய்தனர். ஆனாலும், மீண்டும் ஒரு படத்தில் நடிப்பேன் என தைரியமாக கூறியிருந்தார்.

காஷ்மீரில் சரவணன்
தற்போது தி லெஜண்ட் சரவணன் காஷ்மீரில் தனது அடுத்த படத்துக்கான லொகேஷன் பார்த்து வருகிறாரா? என்கிற கேள்வி சமீப காலமாக காஷ்மீரில் இருந்து அவர் வெளியிடும் போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. பனி மலை பேக்கிரவுண்டில் பளிச்சென போஸ் கொடுத்து மாஸ் காட்டுகிறார் லெஜண்ட் சரவணன்.

லியோ படத்தில் நடிக்கிறாரா
விஜய்யின் லியோ படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் படு பிசியாக நடந்து வரும் நிலையில், லெஜண்ட் சரவணன் ஒரு வேளை சீக்ரெட் ஏஜென்ட்டாக இந்த படத்தில் இணைந்து விட்டாரா என ரசிகர்கள் கமெண்ட் போட்டு ஜாலியாக கலாய்த்து வருகின்றனர். லியோ படத்தில் நீங்கள் தான் வில்லனா என்றும் லியோ படத்தில் மட்டும் நீங்க நடிக்கிறீங்கன்னு சொல்லிடாதீங்க என ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

விரைவில் அப்டேட்
அதற்கு, காரணம் விரைவில் மாஸ் அப்டேட் இன்னும் சில தினங்களில் வரப் போகுது என காஷ்மீரில் இருந்து லெஜண்ட் சரவணன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ட்வீட் போட்டு தனது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளார். அண்ணாச்சியின் அடுத்த படம் என்னவாக இருக்கும் என்பதை விட அதில் எந்த பாலிவுட் ஹீரோயின் நடிக்கப் போகிறார் என்பதே ரசிகர்களின் மிகப்பெரிய கேள்வியாக மாறி உள்ளது.


Click it and Unblock the Notifications











