செம கூல்.. மஞ்சள் டிசர்ட் அணிந்து மாஸ் காட்டும் அண்ணாச்சி.. லெஜண்ட் சரவணனின் லேட்டஸ்ட் க்ளிக்!
சென்னை: டாப் ஹீரோக்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் பெரிய பட்ஜெட்டில் தனது முதல் படமான தி லெஜண்ட் படத்தை இறக்கி அதிர வைத்திருந்தார் லெஜண்ட் சரவணன்.
அடுத்ததாக ஆக்ஷன் படம் இல்லை என்றும் இளம் நடிகர்களுக்கு கடும் போட்டியை கொடுக்க ரொமான்டிக் படத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறார்.
இந்நிலையில், செம கூலாக மஞ்சள் நிற டிசர்ட் அணிந்து செம மாஸாக அவர் போஸ் கொடுத்து எடுத்த போட்டோவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஹீரோவான லெஜண்ட்
துணிக்கடை, நகைக்கடை என பிசினஸ் மேக்னட்டாக இருந்து வந்த லெஜண்ட் சரவணன் தனது கடையின் விளம்பரங்களில் தமன்னா, ஹன்சிகா உள்ளிட்ட பிரபலங்கள் உடன் நடிக்க ஆரம்பித்தார். அப்போதே ஏகப்பட்ட ட்ரோல்கள் குவிந்தன. ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தனது மனதுக்கு பிடித்த விஷயத்தை தொடர்ந்து செய்ய விரும்பிய அண்ணாச்சி தி லெஜண்ட் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

பாலிவுட் ஹீரோயின்
ரஜினி, அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் தான் பாலிவுட் ஹீரோயின்களை களமிறக்குவார்களா? நானும் இறக்கிக் காட்டுறேன் என பாலிவுட்டின் படு ஹாட்டான நடிகை ஊர்வசி ரவுத்தேலாவை தனது முதல் படத்திலேயே ஹீரோயினாக நடிக்க வைத்து தமிழ் சினிமாவிலும் அறிமுகம் செய்து வைத்தார். மேலும், கீத்திகா திவாரி, ராய் லக்ஷ்மி, யாஷிகா ஆனந்த் என படம் முழுக்க ஏகப்பட்ட நடிகைகள் வலம் வந்தனர்.

ரொமான்டிக் ஹீரோ
ஆக்ஷன் ஹீரோவாக தி லெஜண்ட் படத்தில் நடித்து விட்ட நிலையில், அடுத்ததாக காதல் படத்தில் ரொமான்டிக் ஹீரோவாக லெஜண்ட் சரவணன் நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவரும் தனது ட்விட்டர் பக்கத்தில் அதற்கு ஏற்றவாறு படு ரொமான்டிக்காகவே போஸ் கொடுத்து போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.

வாரிசு விஜய்க்கு போட்டி
நடிகர் விஜய் தான் நடிப்புக்கு எனக்கு இன்ஸ்பிரேஷன் என பேசியிருந்த லெஜண்ட் சரவணன் வாரிசு படத்தின் ஷூட்டிங்கில் விஜய் ராஷ்மிகா மந்தனாவுடன் செல்ஃபி எடுத்து வெளியிட்ட நிலையில், அதே போல ஹேர்ஸ்டைலை வைத்துக் கொண்டு லெஜண்ட் சரவணன் கொடுத்த போஸ் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தின. பலரும், வாரிசு செல்ஃபியுடன் சரவணன் போட்டோவை ஷேர் செய்து கமெண்ட் செய்தனர்.

கூல் அண்ட் ரிலாக்ஸ்
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதுவுமாக மஞ்சள் நிற டி சர்ட் அணிந்து படு மாஸாக ரொமான்டிக் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் ட்ரோல்களை பற்றியெல்லாம் கவலைப்படாமல் போட்டு கெத்துக் காட்டி வருகிறார். அதற்கு கேப்ஷனாக "Cool And Relaxing Happy sunday" என அவர் பதிவிட்டுள்ள நிலையில், அவரது ரசிகர்கள் வாவ் போட்டு வருகின்றனர். சீக்கிரமே அடுத்த படத்திற்கு பூஜை போட்டு விடுவார் என்று தான் தெரிகிறது.


Click it and Unblock the Notifications











