ப்பா.. என்ன ஒரு தாராள மனசு.. லெஜண்ட் சரவணா ஹீரோயின் வெளியிட்ட ஹாட் போட்டோ.. ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்!
சென்னை: லெஜண்ட் சரவணாவுக்கு ஜோடியாக நடித்து வரும் பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோ தீயாக பரவி வருகிறது.
சனம் ரே, கிரேட் கிராண்ட் மஸ்தி, ஹேட் ஸ்டோரி 4, விர்ஜின் பானுப்பிரியா என ஏகப்பட்ட பாலிவுட் படங்களில் கிளாமர் குயினாக கலக்கியவர் ஊர்வசி ரவுத்தேலா.
லெஜண்ட் சரவணா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் தமிழ் படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

ஆரஞ்சு நிற பிகினியில்
பிரபல பாலிவுட் நடிகையான ஊர்வசி ரவுத்தேலா இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியான போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். கடந்த ஆண்டு போடப்பட்ட லாக்டவுன் நேரத்தில் தினமும் தொடர்ந்து தனது ஹாட்டான போட்டோக்களை பதிவிட்டு ஃபாலோயர்களை அதிகரித்தார். ஆரஞ்சு நிற பிகினியில் கடற்கரை மணலில் இவர் கொடுத்த போஸ் இணையத்தை பயங்கரமாக சூடாக்கியது.

மேலாடை அணியாமல்
லெஜண்ட் சரவணா படத்தில் ஒப்பந்தமாகி உள்ள பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா மேலாடை ஏதும் அணியாமல் டாப்லெஸ் ஆக பின் பக்கம் திரும்பி நின்றபடி மொத்த முதுகையும் காட்டி வெளியிட்ட போட்டோ ஒட்டுமொத்த ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியது. விரைவில் கோலிவுட் ரசிகர்களையும் இவர் கிறங்கடிக்க காத்துக் கொண்டிருக்கிறார்.

லெஜண்ட் உடன் ரொமான்ஸ்
இரட்டை இயக்குநர்களான ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் 200 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் லெஜண்ட் சரவணா நடிக்கும் அறிமுக படத்தில் அவருக்கு ஜோடியாக ஊர்வசி ரவுத்தேலா நடித்து வருகிறார். நேற்று மணாலியில் படப்பிடிப்பு ஆரம்பமான நிலையில் அதன் போட்டோக்கள் வெளியாகி சமூக வலைதளங்களை ஸ்தம்பிக்க வைத்தன.

கோடம்பாக்கம் பக்கம்
பாலிவுட் நடிகையான ஊர்வசி ரவுத்தேலா ஏற்கனவே தென்னிந்திய மொழிகளில் சில படங்களில் நடித்துள்ளார். கன்னட மொழியில் மிஸ்டர் ஐராவதா படத்தில் தர்ஷனுக்கு ஜோடியாக நடித்தார். தெலுங்கில் பிளாக் ரோஸ் எனும் படத்தில் நடித்து முடித்துள்ள இவர், அடுத்ததாக கோடம்பாக்கம் பக்கம் காலடி எடுத்து வைத்துள்ளார்.

ஆடையை கழட்டி
சமீபத்தில் பிரபல பாடகர் யோ யோ ஹனி சிங்குடன் இணைந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஊர்வசி ரவுத்தேலா, தனது மேலாடையை கழட்டி ரசிகர்கள் மேல் வீசினார். அப்போது அவர் மார்பை ஒட்டி அணிந்திருந்த ஆடையும் அவிழ்ந்து விழ பார்க்க, உடனடியாக பிடித்து எந்தவொரு எக்ஸ்போஸுக்கும் வழி கொடுக்காமல் பார்த்துக் கொண்ட வீடியோவும் வைரலானது.

தாராள மனசு
மணாலியில் லெஜண்ட் சரவணாவின் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ஊர்வசி ரவுத்தேலா, தனது இன்ஸ்டாகிராம் ரசிகர்களுக்காக தற்போது வெளியிட்டுள்ள ஹாட் போட்டோ செம வைரலாகி வருகிறது. தாராள மனசுடன் இப்படி படு கவர்ச்சியாக போட்டோ போடுறீங்களே என ஏகப்பட்ட நெட்டிசன்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

10 லட்சம் லைக்ஸ்
சுமார் 35 மில்லியன் ரசிகர்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொண்டுள்ள ஊர்வசி ரவுத்தேலா வெளியிடும் போட்டோக்களுக்கு மில்லியன் கணக்கில் லைக்குகள் குவிவது வழக்கமான ஒன்று தான். தற்போது அவர் வெளியிட்டுள்ள அந்த ஹாட் போட்டோவிற்கு சில மணி நேரங்களிலேயே ஒரு மில்லியன் லைக்ஸ் குவிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











