Don't Miss!
- Technology
புண்பட்ட நெஞ்சை FREE டேட்டாவை வச்சு தேத்திக்கோங்க.. Vodafone அறிவித்துள்ள "அடேங்கப்பா" ஆபர்!
- News
முதுபெரும் தலைவர் நல்லக்கண்ணுக்கு உடல் நலம் பாதிப்பு..ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை
- Finance
சென்செக்ஸ் 670 புள்ளிகள் சரிவு.. 2 முக்கியக் காரணம்..!!
- Sports
திறமைகளை வளர்த்து கொள்ளுங்கள்.. இல்லை சூர்யகுமாரால் ஆபத்து வரும்.. நெஹ்ரா கொடுத்த எச்சரிக்கை
- Automobiles
ஷோரூம்களுக்கு வர தொடங்கிய மாருதியின் விலை குறைவான கார்! திருவிழா மாதிரி பொதுமக்கள் கூட்டம் கூடுதாம்!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
யாஷிகா ஆனந்த் உடன் செம குத்தாட்டம்.. லெஜண்ட் சரவணாவின் தி லெஜண்ட் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்படி இருக்கு?
சென்னை: லெஜண்ட் சரவணாவின் அறிமுக படமான தி லெஜண்ட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான "மொசலோ மொசலு" பாடல் தற்போது வெளியாகி டிரெண்டாகி வருகிறது.
இயக்குநர் ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
லெஜண்ட் சரவணாவின் தத்துவங்கள் அதிகம் நிறைந்த ஓப்பனிங் பாடலில் நடிகை யாஷிகா ஆனந்த் கவர்ச்சி பொங்க குத்தாட்டம் போட்டுள்ளார்.
சேரனை
ஏன்
கதாநாயகனாக
தேர்வு
செய்தேன்...
காரணத்தை
கூறிய
தங்கர்பச்சான்!

லெஜண்ட் சரவணா
தி நியூ லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் தயாரிப்பில் பல கோடி செலவில் மிக பிரம்மாண்டமாக உருவாகி உள்ளது தி லெஜண்ட் திரைப்படம். இரட்டை இயக்குநர்களான ஜேடி ஜெர்ரி இந்த படத்தை இயக்கி உள்ளனர். லெஜண்ட் சரவணன் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் தற்போது வெளியாகி உள்ளது.

மொசலோ மொசலு
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கேட்க செம சூப்பராகவும் பார்க்க கலர்ஃபுல்லாகவும் உருவாகி உள்ளது தி லெஜண்ட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் மொசலோ மொசலு. வித்தக கவிஞர் பா. விஜய்யின் தத்துவ வரிகளில் உருவாகி உள்ள இந்த பாடலை அர்மான் மாலிக் பாடியுள்ளார். லெஜண்ட் சரவணன் செம ஆட்டம் போட்டு மாஸ் காட்டி உள்ளார்.

யாஷிகா ஆனந்த் குத்தாட்டம்
ஹீரோ இன்ட்ரோ பாடலான இதில், கவர்ச்சி நடிகை யாஷிகா ஆனந்த் லெஜண்ட் சரவணன் உடன் இணைந்து செம குத்தாட்டம் போட்டுள்ளார். உடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நிலையில், இந்த பாடல் படமாக்கப்பட்டதால் யாஷிகாவா அது என கணிக்க முடியாத அளவுக்கு உள்ளார். பிங்க் உடையில் பஞ்சு மிட்டாய் போல இருவரும் பட்டையை கிளப்புகின்றனர். ராஜு சுந்தரம் மாஸ்டர் தான் இந்த பாடலுக்கு கொரியோகிராஃபி.

தோனி போல சிக்ஸர்
கல்லில் அடிச்சா கலங்கிட வேண்டாம்.. சொல்லில் அடிச்சா நொறுங்கிட வேண்டாம்.. நம்ம தோனி போல நீயும் கடைசி பந்தில் சிக்ஸர் அடிச்சு தாக்கு என செம தத்துவங்கள் அடங்கிய வரிகளுடன் இந்த பாடல் உருவாகி உள்ளது. நியூட்டன், அம்மா, அப்பா, நண்பன் சென்டிமென்ட் என பல விஷயங்களை பா. விஜய் உள்ளே வைத்திருக்கிறார்.

விளம்பரம் போல
சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம் போலவே இந்த பாடலும் செம கலர்ஃபுல்லாகவும் ராயலாகவும் உள்ளது. ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் லெஜண்ட் சரவணாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா நடித்துள்ளார். விரைவில் இந்த திரைப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.