ப்பா.. என்னவொரு ஸ்டைலா வாசிக்கிறாரு.. லெஜண்ட் படத்தின் மியூசிக் ரைட்ஸ் யார் வாங்கியிருக்கா தெரியுமா?

சென்னை: லெஜண்ட் சரவணன் நடித்துள்ள தி லெஜண்ட் படத்தின் இசை உரிமத்தை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ள அறிவிப்பு அட்டகாசமான புதிய போஸ்டருடன் வெளியாகி டிரெண்டாகி வருகிறது.

இரட்டை இயக்குநர்களான ஜேடி - ஜெர்ரி இயக்கத்தில் லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் ஹீரோவாக அறிமுகமாகவுள்ள தி லெஜண்ட் படம் விரைவில் வெளியாக காத்திருக்கிறது.

இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா நடித்துள்ளார்.

செம வியாபாராம்

செம வியாபாராம்

தி நகர் ரங்கநாதன் தெருவில் மட்டுமின்றி ஏகப்பட்ட இடங்களில் தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் கடையை ஆரம்பித்து செம வியாபாரம் செய்து வருகிறார் தொழிலதிபர் சரவணன் அருள். நடிப்பின் மீது ஏற்பட்ட ஆர்வம் காரணமாக விளம்பர படங்களில் முன்னணி நடிகைகளுடன் நடனமாடி வந்த சரவணன் அருள், தற்போது தி லெஜண்ட் எனும் படத்தில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார்.

இரட்டை இயக்குநர்கள்

இரட்டை இயக்குநர்கள்

அஜித், விக்ரம் நடிப்பில் வெளியான உல்லாசம் படத்தை இயக்கிய இரட்டை இயக்குநர்களான ஜேடி - ஜெர்ரி அடுத்ததாக ஷெரின் நடிப்பில் வெளியான விசில் படத்தை இயக்கி இருந்தனர். அதன் பிறகு படங்கள் எதையும் இயக்காமல் விளம்பரப் படங்களை இயக்கி வந்த அவர்கள் தற்போது தி லெஜண்ட் படத்தை இயக்கி உள்ளனர்.

ஊர்வசி ரவுத்தேலா

ஊர்வசி ரவுத்தேலா

லெஜண்ட் சரவணா ஹீரோவாக நடிக்க உள்ள நிலையில், நயன்தாரா, ஹன்சிகா, தமன்னா உள்ளிட்ட முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாகவும், ஹீரோயின்கள் நடிக்க மறுத்ததாகவும் தகவல்கள் வெளியாகின. பட பூஜையின் போது கீத்திகா திவாரி நடிகை ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், பின்னர் அவரும் விலகிய நிலையில், ஊர்வசி ரவுத்தேலா ஹீரோயினாக இந்த படத்தில் நடித்துள்ளார்.

ஆடியோ ரைட்ஸ்

ஆடியோ ரைட்ஸ்

தி லெஜண்ட் படத்திற்கு ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இந்த படத்தின் மியூசிக்கல் ரைட்ஸை பிரபல இசை நிறுவனமான திங்க் மியூக் கைப்பற்றியுள்ளது. தற்போது அந்த அறிவிப்புடன் அவர்கள் வெளியிட்ட ஒரு புதிய போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

செம ஸ்டைல்

செம ஸ்டைல்

தி லெஜண்ட் படத்தின் ஹீரோ சரவணன் அருள் இசைக்கருவியை வாயில் வைத்து வாசிக்கும் படி செம ஸ்டைலாக கொடுத்துள்ள போஸ் இடம்பெற்றுள்ள தி லெஜண்ட் படத்தின் புதிய போஸ்டரை ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். விரைவில் தி லெஜண்ட் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X