அண்ணாச்சினா சும்மாவா? ஹாட் ஸ்டாரில் நம்பர் ஒன் இடத்தை பிடித்த 'தி லெஜண்ட்'

சென்னை : லெஜண்ட் சரவணனின் தி லெஜண்ட் திரைப்படம் ஹாட் ஸ்டாரில் மாஸ் காட்டி வருகிறது.

பான் இந்தியா அளவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் என 5 மொழிகளில் மிகுந்த பொருட்செலவில் 'தி லெஜண்ட்' திரைப்படம் வெளியானது.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்த இந்த படத்தின் இடம்பெற்றிருந்த அனைத்துப் பாடல்களும் ரசிகர்களை கவர்ந்து ஆட்டம்போடவைத்தது.

லெஜண்ட் சரவணன்

லெஜண்ட் சரவணன்

சரவணா ஸ்டோர் கடையின் உரிமையாளரான லெஜண்ட் சரவணன், ஜே.டி மற்றும் ஜெர்ரி இயக்கி உள்ள தி லெஜண்ட் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். இதில், கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவ்தெலா, விவேக், பிரபு, யோகிபாபு, நாசர், மயில்சாமி, பழம்பெரும் நடிகை சச்சு, ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

வசூலை வாரிக்குவித்த லெஜெண்ட்

வசூலை வாரிக்குவித்த லெஜெண்ட்

லெஜெண்ட் படத்தில் சைன்டிஸ்ட் கேரக்டரில் சரவணன் நடித்திருக்கிறார். அக்ஷன் வேணுமா ஆக்ஷன் இருக்கு, சண்டை வேணுமா சண்டை இருக்கு, ரொமான்ஸ் வேணுமா ரொமான்ஸ் இருக்கு என அனைத்தும் அடங்கிய கமர்ஷியல் படமாக தி லெஜண்ட் திரைப்படம் ஜூன் 28ந் தேதி திரையரங்கில் வெளியாகி வசூலை வாரிக்குவித்தது.

போட்டி போட்ட ஓடிடி தளங்கள்

போட்டி போட்ட ஓடிடி தளங்கள்

சையின்டிஸ்டாக லெஜெண்ட் சரவணன், சர்க்கரை நோய்க்கு மருந்து கண்டுபிடித்து, அந்த மருந்தை ஏழைகளுக்கு இலவசமாக கொடுக்க நினைக்கிறார். இதனால், பல பிரச்சனைகளில் சிக்குகிறார். ஆனால், தனது புத்திசாலித்தனத்தால் அதில் இருந்து மீண்டு வருகிறார். இத்திரைப்படம் திரையரங்கில் வெளிவதற்கு முன்பே ஓடிடி வியாபாரத்திற்கு டிமாண்ட் இருந்தது.

மாஸ் காட்டும் லெஜண்ட்

மாஸ் காட்டும் லெஜண்ட்

தி லெஜண்ட் திரைப்படம் தியேட்டரில் வெளியாகி கிட்டத்தட்ட 6 மாதங்கள் ஆனநிலையில், மார்ச் 3ந் தேதியான நேற்று டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது. திரையரங்கில் படத்தை தவறவிட்ட ரசிகர்கள், ஓடிடி தளத்தில் படத்தை ரசித்து பார்த்து வருவதால், ஹாட் ஸ்டாரில் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது. இந்த தகவலை லெஜண்ட் சரவணன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அடுத்த படம் குறித்த அறிவிப்பு

அடுத்த படம் குறித்த அறிவிப்பு

தி லெஜன்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக லெஜண்ட் சரவணன் நடிக்கவுள்ள படத்திற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல லியோ படத்திலும் லெஜண்ட் சரவணன் நடிக்க இருப்பதாகவும் சோஷியல் மீடியாவில் ஒரு தகவல் பரவியது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X