“மிஸ் யூ சார்“ விவேக்கை நினைத்து உருகிய லெஜண்ட் சரவணன்.. இந்த மனசுதான் சார் கடவுள்!

சென்னை : ட்விட்டரில் ஆக்டிவாக இருக்கும் லெஜண்ட் சரவணன், நடிகர் விவேக்குடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து உருகி உள்ளார்.

தி லெஜண்ட் திரைப்படம் நடிகர் விவேக் நடித்த கடைசி திரைப்படமாகும். இந்த படத்தில் விவேக்கின் காமெடி ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.

இந்த படத்தில் லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக, ஊர்வசி ரவுத்தலே கோலிவுட் திரையுலகில் நாயகியாக அறிமுகமாகியுள்ளார். மேலும் யோகி பாபு, பிரபு, நாசர், கோவை சரளா, சச்சு, ரோபோ சங்கர், மயில்சாமி, ஆகியோர் நடித்துள்ளனர்.

லெஜண்ட் சரவணன்

லெஜண்ட் சரவணன்

விளம்பர படங்களில், விதவிதமான ஆட்டம் பாடத்தோடு தொலைக்காட்சிகளில் தலைகாட்டிய லெஜண்ட் சரவணன், நடிகராக அவதாரம் எடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இவரது விளம்பரங்களை தொடர்ந்து இயக்கி வந்த இரட்டை இயக்குனர்களான ஜெடி மற்றும் ஜெர்ரி இவர் நடித்த 'தி லெஜெண்ட்' திரைப்படத்தையும் இயக்கினர்.

பான் இந்திய படம்

பான் இந்திய படம்

இத்திரைப்படம் ஜூலை 28 ஆம் தேதி மிகப்பிரம்மாண்டமாக உலகம் முழுவதும் வெளியானது. சுமார் 2500க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும், தமிழகத்தில் மட்டும் 650 திரையரங்குகளில் வெளியானது. ஒரு முன்னணி நடிகரின் படத்திற்கு இணையாக தமிழ், தெலுங்கு,மலையாளம், இந்தி என 4 மொழிகளில் பான் இந்தியா படமாக தி லெஜண்ட் திரைப்படம் வெளியானது.

சயின்டிஸ்ட்

சயின்டிஸ்ட்

இந்த படத்தின் சயின்ட்டிஸ்டாக நடித்திருந்த சரவணன் ஒரு சிறந்த கருத்தை ஒரு நடிகராகவும், தயாரிப்பாளராகவும் கூறி இருந்தார். ஆனால், கதைக்களம் வீக்காக இருந்ததால் அது படத்தின் பின்னடைவுக்கு சற்று காரணமாக அமைந்துவிட்டது என கூறப்பட்டது. இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வந்தாலும், தற்போது வரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருப்பதே, மிக பெரிய வெற்றிதான் என கூறப்படுகிறது.

“மிஸ் யூ விவேக் சார்“

“மிஸ் யூ விவேக் சார்“

இந்நிலையில், ட்விட்டரில் ஆக்டிவாக இருக்கும் லெஜண்ட் சரவணன், தனது ட்விட்டர் பக்கத்தில் தி லெஜண்ட் படப்பிடிப்பின் போது நடிகர் விவேக்குடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து "மிஸ் யூ விவேக் சார்" என உருக்கத்துடன் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், விவேக் மண்ணைவிட்டு மறைந்தாலும், அவரை மறக்காத இந்த மனசுதான் சார் கடவுள் என நெட்டிசன்ஸ் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X