Legend: லெஜண்ட் சரவணா இறக்கிய மாஸ் போட்டோஸ்.. வரப்போகும் அப்டேட் இதுவா.. நச்சரிக்கும் ரசிகர்கள்

சென்னை: சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான லெஜண்ட் சரவணா. இவர் கடந்த 2022ஆம் ஆண்டு இவரது தயாரிப்பில் உருவான தி லெஜண்ட் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே மக்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை லெஜண்ட் சரவணா பெற்றதால் அவர் குறித்த சினிமா அப்டேட்கள் வந்தால் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. தற்போது தனது இரண்டாவது படத்தில் நாயகனாக நடித்து வரும் லெஜண்ட் சரவணா தனது புதிய படத்திற்கான தனது புதிய லுக்கை வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே கூறியதைப்போல் கடந்த 2022ஆம் ஆண்டு லெஜண்ட் சரவணா, தி லெஜண்ட் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படத்தை ஜேடி- ஜெர்ரி இணைந்து இயக்கியிருந்தார்கள். படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். படத்தின் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு இருந்தது. படம் வெளியாகி குழந்தைகள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. படம் பார்த்த இணையவாசிகள் அவரை ட்ரோல் மெட்டீரியலாக மாற்றி இணையத்தில் மீம்களை போட்டு வந்தார்கள்.

Legend Saravanan Shares His Recent Photos And Fans Asking Second Movie Update

லெஜண்ட் சரவணா : இவர் தற்போது தனது இரண்டாவது படத்தில் கமிட் ஆகி நடித்து வருகிறார். இந்த படத்தில் ஷாம், ஆண்ட்ரியா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இது மட்டும் இல்லாமல், படத்தின் நாயகியாக பாயல் ராஜ்புத் நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த படம் உண்மைச் சம்பவத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே சென்னையில் சில நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது. இது மட்டும் இல்லாமல், மும்பை, டெல்லி மற்றும் ஜார்ஜியா பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டு, படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படத்தையும் லெஜண்ட் சரவணா தயாரிக்கிறார்.

எதிர்பார்ப்பு: எதிர் நீச்சல், காக்கி சட்டை, கொடி ஆகிய படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இந்த படத்தை இயக்குகிறார். படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படத்தை படக்குழு இந்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டது. ஆனால் படப்பிடிப்பு இன்னும் முடியாததால், படம் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் ரிலீஸ் ஆக அதிக வாய்ப்புகள் உள்ளது என கூறப்படுகிறது. படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். உண்மைச் சம்பவத்தை மையப்படுத்திய கதை என்பதால் படத்தின் மீது தனி எதிர்பார்ப்பு உள்ளது. மேலும் படத்தின் இயக்குநர் துரை செந்தில்குமார் என்பதால் படத்தின் மீது கவனம் குவிந்துள்ளது.

Legend Saravanan Shares His Recent Photos And Fans Asking Second Movie Update

அப்டேட்: இப்படியான நிலையில் லெஜண்ட் சரவணா தனது, சமூக வலைதளப் பக்கத்தில் தான் சமீபத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதற்கு ரீசன்ட் கிளிக்ஸ், சுவாரஸ்யமான அப்டேட்டுகள் விரைவில் வரும் எனவும் கேப்ஷன் இட்டுள்ளார். இந்த நியூ லுக் படத்திற்கானதாக இருக்கும் என கூறப்படுகிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள் லைக்குகளை வாரி வழங்கி வருகிறார்கள். மேலும் கமெண்ட் செக்‌ஷனில் அவரது இரண்டாவது படத்திற்கான அப்டேட்டுகளை கேட்டு வருகிறார்கள். மேலும் அவரே அப்டேட்டுகள் விரைவில் வரும் எனத் தெரிவித்துள்ளதால், படத்தின் டீசர் வெளியீடு குறித்த அப்டேட்டுகளாகத்தான் இருக்கும் என ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.

FAQs
லெஜண்ட் சரவணன் ஹீரோவாக அறிமுகமான முதல் தமிழ் படம் எது?

தி லெஜண்ட்

Filmibeat Entertainment

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X