Legend Saravanan: தாடி, மீசை கெட்டப்பில் தாறுமாறு காட்டுறாரே.. லெஜண்ட் சரவணன் அடுத்த படத்துக்கு ரெடி
சென்னை: தி நகரில் மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்யத்தை நடத்தி வரும் லெஜண்ட் சரவணன் தி லெஜண்ட் படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார். பெரிய பட்ஜெட்டில் மணாலியில் எல்லாம் ஷூட்டிங் நடத்தி தி லெஜண்ட் படத்தை எடுத்து வெளியிட்டார். பாலிவுட் ஹீரோயின் ஊர்வசி ரவுத்தேலா அந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இந்நிலையில், லெஜண்ட் சரவணன் தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தி லெஜண்ட் படத்தின் ஷூட்டிங்கை மணாலியில் ஆரம்பித்து குளு குளுவென காட்சிகள் இருக்க வேண்டும் என அதிக செலவு செய்திருந்தார். விசில் படத்தை இயக்கிய ஜேடி ஜெர்ரி சரவணா ஸ்டோர்ஸ் விளம்பர படங்களை இயக்கி வந்த நிலையில், தி லெஜண்ட் படத்தையும் இயக்கினர்.

காஷ்மீரில் லெஜண்ட்: தற்போது தி லெஜண்ட் சரவணன் காஷ்மீரில் தனது அடுத்த படத்துக்கான லொகேஷன் பார்த்து வருகிறார். காஷ்மீரில் இருந்து அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் லெஜண்ட் சரவணனா இது என மலைத்துப் போய் பார்த்து வருகின்றனர். பனி மலை பேக்கிரவுண்டில் பளிச்சென போஸ் கொடுத்து மாஸ் காட்டுகிறார் லெஜண்ட் சரவணன்.

துரை செந்தில்குமார் இயக்குகிறாரா?: அடுத்த படத்துக்கும் எல்லாமே ரெடியாகி விட்டது என்றும் விரைவில் மாஸ் அப்டேட் இன்னும் சில தினங்களில் வரப் போகுது என காஷ்மீரில் இருந்து லெஜண்ட் சரவணன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ட்வீட் போட்டு தனது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளார். அண்ணாச்சியின் அடுத்த படம் என்னவாக இருக்கும் என்றும் இந்த படத்தை துரை செந்தில்குமார் இயக்கப் போவதாக தகவல்கள் வெளியான நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சிவகார்த்திகேயனை வைத்து எதிர்நீச்சல், காக்கிச் சட்டை, தனுஷின் கொடி உள்ளிட்ட படங்களை இயக்கிய அவர் சூரி, சசிகுமார் நடிப்பில் உருவாகி வரும் கருடன் படத்தை இயக்கி முடித்துள்ளார். அந்த படம் மார்ச் 29ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
சூப்பர் லுக்: தாடி, மீசை என முதல் படத்துக்கும் இந்த படத்துக்கும் ஆளே வித்தியாசமாக மாறி காட்சியளிக்கிறார் லெஜண்ட் சரவணன். ஆரம்பத்தில் அவரது தாடியை பார்த்து விட்டு கிராமத்து சப்ஜெக்ட் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காஷ்மீரில் வேறலெவல் ஆக்ஷன் படத்தை உருவாக்க முடிவு செய்திருப்பதாக கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











